

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட காட்டுப்பாக்கம் அதிமுக வார்டு உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கட்சியின் கொள்கை குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாலும், திருவள்ளூர் வடக்கு மாவட் டம், பூவிருந்தவல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற 12வது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப் பட்டுள்ளார். கட்சியினர் அவருடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.