‘ஏசி’ காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தமிழகத்தில் 25 நவீன பத்திரப் பதிவு மையங்கள்: பதிவுத் துறை டெண்டர் வெளியீடு

‘ஏசி’ காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தமிழகத்தில் 25 நவீன பத்திரப் பதிவு மையங்கள்: பதிவுத் துறை டெண்டர் வெளியீடு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் பத்திரப் பதிவு சேவைகளை மேம்படுத்த நவீன வசதிகளுடன் கூடிய 25 மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பத்​திரப் பதிவுக்​காக நீண்ட நேரம் காத்​திருப்பு மற்​றும் கூட்ட நெரிசலைக் குறைப்​ப​தற்​காக 25 நவீன மாதிரி பதிவு மையங்​கள் அமைக்​கப்​படும் என்று பதிவுத் துறை அமைச்​சர் டி.லோகேஷ் தமிழ்​செல்​வன் கடந்த சட்​டப்​பேர​வைக் கூட்​டத் தொடரில் அறி​விப்பு வெளி​யிட்​டிருந்​தார்.

இதற்​கான டெண்​டர் அறி​விப்பை பதிவுத் துறை தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. தகு​தி​யுள்ள நிறு​வனங்​கள் tntenders.gov.in இணை​யதளத்​தில் நவ.16-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். டெண்​டரில் பங்​கேற்க ரூ.65 லட்​சம் முன்​வைப்​புத் தொகை​யாகச் செலுத்த வேண்​டும் என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

புதிய மையங்​களில் ஏசி வசதி​யுடன் கூடிய காத்​திருப்பு அறை​கள், டோக்​கன் முறை, கைரேகை உள்​ளிட்ட அடை​யாள சரி​பார்ப்பு வசதி, உதவி மையங்​கள், குடிநீர் மற்​றும் கழிப்​பறை வசதி​கள் ஏற்​படுத்​தப்பட உள்​ளன. சிசிடிவி கேம​ராக்​கள் மூல​மாக​வும் கண்​காணிக்​கப்​படும்.

ஆவணங்​களை விரை​வாக சரி​பார்த்​துப் பதிவு செய்​வதுடன், இடைத் தரகர்​களின் தலை​யீட்​டைக் குறைத்​து, வெளிப்​படைத்​தன்​மையை மேம்​படுத்​து​வதும் இதன் நோக்​கம் ஆகும். இந்த மையங்​களை வடிவ​மைத்​துப் பராமரிக்​கும் பணி​கள் தனி​யார் நிறு​வனத்​திடம் ஒப்​படைக்​கப்பட உள்​ளன.

இதற்​கான ஒப்​பந்​தக் காலம் 5 ஆண்​டு​கள். முதல்​கட்ட சோதனை முயற்​சி​யாக 5 நவீன பதிவு மையங்​கள் அமைக்​கப்​படும். அதற்​கான வரவேற்​பைப் பொருத்து அடுத்​தகட்​ட​மாக மேலும் 20 மையங்​கள் அமைக்​கப்​படும்.

இதன்​மூலம் மொத்​தம் 25 மையங்​கள் உரு​வாக்​கப்பட உள்​ளன. இத்​திட்​டம் செயல்​பாட்​டுக்கு வரும்​போது, பத்​திரப் பதிவுக்​காக காத்​திருக்​கும் நேரத்​தைக் குறைத்​து, பொது​மக்​களுக்கு மேம்​பட்ட சேவை​களை வழங்க முடி​யும் என்​று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘ஏசி’ காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தமிழகத்தில் 25 நவீன பத்திரப் பதிவு மையங்கள்: பதிவுத் துறை டெண்டர் வெளியீடு
நவராத்திரி கொண்டாட்டத்தின்போது மேற்கத்திய இசை, நடன நிகழ்ச்சி நடத்தினால் போலீஸார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in