தமிழக, புதுவை மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக, புதுவை மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது
Updated on
1 min read

காரைக்கால் / சென்னை: எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாக காரைக்​கால், தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்​தனர். அவர்​களை விடுவிக்க மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சக மீனவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

காரைக்​கால் மாவட்டம் கிளிஞ்​சல்​மேடு, காசாக்​குடிமேடு, மயி​லாடு​துறை, நாகை அக்​கரைப்​பேட்​டை, சாமந்​தான்​பேட்டை பகு​தி​களைச் சேர்ந்த 14 மீனவர்கள் ஒரு படகில் கடந்த 15-ம் தேதி​யும், காரைக்​கால், நாகை நம்​பி​யார் நகர், சீர்​காழி திரு​முல்​லை​வாசல் பகு​தி​களைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த 11-ம் தேதி​யும் காரைக்​கால் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து கடலுக்கு மீன்​பிடிக்​கச் சென்​றனர்.

இவர்​கள் நேற்று முன்​தினம் நள்​ளிரவு கோடியக்​கரைக்கு தென்​கிழக்கே மீன்​பிடித்து கொண்​டிருந்​தனர். அப்​போது அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்து மீன்​பிடித்​த​தாக மீனவர்கள் 25 பேரை​யும் கைது செய்​ததுடன், 2 விசைப்​படகு​களை​யும் பறி​முதல் செய்து காங்​கேசன்துறை துறை​முகத்​துக்கு கொண்டு சென்​றனர்.

இதுகுறித்த தகவல் காரைக்​கால் பகுதி மீனவர்​களுக்​கும், மீன்​வளத்​துறை​யினருக்​கும் தெரிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், கைது செய்​யப்​பட்ட மீனவர்​களை​யும், படகு​களை​யும் மீட்க மத்​திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இலங்கை கடற்​படை​யின​ரால் மீனவர்கள் தொடர்ச்​சி​யாக கைது செய்​யப்​படு​வதை தடுக்க மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என கைது செய்​யப்​பட்ட மீனவர்​களின் குடும்​பத்​தா​ரும், மீனவப் பஞ்​சா​யத்​தார்​களும் தெரி​வித்​துள்​ளனர்.

விஜய் கண்​டனம்: இதுகுறித்து தவெக தலை​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: மீனவர்​களுக்கு தொடர்ந்து இது​போல நிகழ்​வதைத் தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எதை​யும் எடுக்​க​வில்​லை. தாம் கடிதம் எழுது​வதே போதும் என்று தமிழக முதல்​வர் எண்​ணுகிறா​ரா? இது ஒரு புரி​யாத புதி​ராகவே இருக்​கிறது.

மனி​தாபி​மான முறை​யில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடி​யாக மீட்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.

இதுதொடர்பாக, சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள், மத்​திய அரசை உண்​மை​யாகவே உணர்​வுப்பூர்​வ​மாக வலி​யுறுத்​த வேண்​டும்.

தமிழக, புதுவை மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அரிவாளை வீசிய இளைஞர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in