

அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றியத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வும், கூடுதல் ஊதிய உயர்வும் வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும். பொது வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்ய வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீருடையை தரமானதாக வழங்க வேண்டும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும், பள்ளிகளுக்கு வழங்கப் படுவதுபோல அங்கன்வாடி பணியாளர்களுக்கும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
அங்கன்வாடி மைய கட்டிடத் துக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.
இதில் மாநில பொதுச் செய லாளர் வாசுகி அருள், துணைத் தலைவர் கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.