கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ள இஸ்ரேல் நாட்டு பயணிகளுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

பழநி: ​கொடைக்​கானலில் இஸ்ரேல் நாட்டு சுற்​றுலா பயணி​கள் தங்​கி​யிருக்​கும் வட்​டக்​கானல் பகு​தி​யில் துப்​பாக்கி ஏந்​திய போலீ​ஸார், நக்​சல் தடுப்​புப் பிரிவு படை​யினர் 24 மணி நேர​மும் தீவிர பாதுகாப்​பு பணி​யில் ஈடுபட்டுள்ளனர்.

கொடைக்கானலில் டிசம்​பர் முதல் மார்ச் வரை இஸ்ரேல் சுற்​றுலாப் பயணி​கள் அதிக அளவில் வந்து வட்​டக்​கானல் பகு​தியில் தங்​கு​வர். இங்கு வரும் இஸ்​ரேலியர்​கள் மொத்​த​மாகக் கூடி சிறப்பு வழி​பாட்​டில் ஈடு​படு​வது வழக்​கம். அதன்​படி, தற்​போது வட்​டக்​கானல் பகு​தி​யில் 50-க்​கும் மேற்​பட்ட இஸ்ரேல் சுற்​றுலாப் பயணி​கள் வந்து தங்​கி​யுள்​ளனர்.

தற்போது ஈரான் - இஸ்ரேல் போர் பதற்​றம் காரண​மாக, வட்​டக்​கானல் பகு​தி​யில் தங்​கி​யுள்ள இஸ்ரேல் சுற்​றுலா பயணி​களின் பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யில், கொடைக்​கானல் போலீ​ஸார் மற்​றும் நக்​சல் தடுப்பு பிரிவு படை​யினர் துப்​பாக்​கி​யுடன் 24 மணி நேர​ பாது​காப்பு மற்​றும் ரோந்து பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

மேலும் சோதனைச் சாவடி பகு​தி​யில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. வாக​னங்​கள் சோதனைக்கு உள்​ளாக்​கப்​படு​கின்​றன. நிலைமை சீராகும் வரை​ இந்தப் பாது​காப்​புப் பணி தொடரும் என போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
அரசு சொத்துகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை: தாலுகா சட்டப்பிரிவை ஏற்படுத்த ஐகோர்ட் பரிந்துரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in