ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக காவேரி விரைவு ரயில் உட்பட 23 ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக காவேரி விரைவு ரயில் உட்பட 23 ரயில்களின் சேவையில் மாற்றம்
Updated on
1 min read

ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக, காவேரி விரைவு ரயில் உட்பட 23 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கன்டோண்மென்ட்டில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இத்தடத்தில் 23 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை சென்ட்ரல் - அசோகாபுரம் காவேரி விரைவு ரயில் (16021), வரும் ஜூன் 3, 4, 5, 6, 9, 10, 11, 21, 26 ஜூலை 2, 5, 6-ம் தேதிகளில் ரத்து செய்யப்படும்.

அசோகாபுரம்- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (16022) வரும் ஜூன் 4, 5, 6, 7, 10, 11, 12, 22, 27 ஜூலை 3, 6, 7ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படும் கே.எஸ்.ஆர். பெங்களூரு- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12658), வரும் ஜூன் 4, 5, 6, 7, 10, 11,12, 22, 27 ஜூலை 3, 6, 7 ஆகிய தேதிகளி லும், சென்னை சென்ட்ரல் பெங்களூரு அதி விரைவு ரயில் (12657) வரும் ஜூன் 5, 6, 7, 8, 11, 12, 13, 23, 28 ஜூலை 4, 7, 8ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

கர்நாடக மாநிலம் யஷ்வந்த் பூர்- சென்னை சென்ட்ரல் ரயில் (12291), வரும் ஜூன் 5, 12, ஜூலை 3ம் தேதிகளிலும், சென்னை சென்ட்ரல் யஸ் வந்த்பூர் அதி விரைவு ரயில் (12292) வரும் ஜுன் 6, 13, ஜூலை 4 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

மைசூர்- சென்னை சென்ட் ரல் அதி விரைவு ரயில் (22681) வரும் ஜூன் 10ம் தேதியும். சென்னை சென்ட்ரல்- மைசூர் அதி விரைவு ரயில் (22682) வரும் ஜூன் 11-ம் தேதியும் ரத்து செய்யப்படும்.

கே.எஸ்.ஆர். பெங்களூரு- ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை- கே.எஸ்.ஆர்.பெங்களூரு பயணிகள் ரயில்கள் (66550-66549) வரும் ஜூலை 7ம் தேதியன்று ரத்து செய்யப்படுகிறது.

ஜோலார்பேட்டை - கேஎஸ்ஆர் பெங்களூரு நகர் மெழு ரயில் (16519) பகுதி ரத்து செய்யப்படும். இதுதவிர, 12 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளன. இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக காவேரி விரைவு ரயில் உட்பட 23 ரயில்களின் சேவையில் மாற்றம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு டைட்டானியம் உலோகத்தில் செயற்கை மார்பு எலும்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in