

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் - முதல்வர் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள் ளது. நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததில் ஆளுநர் விதிகளை மீறியுள்ளதாக, குடியரசுத் தலைவரிடம் புகார் அளிப்போம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மாநில அரசு பரிந்துரைக்காமல் ஆளுநர் கிரண் பேடி பரிந்துரைத்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக ஏற்று மத்திய அரசு உத்தரவிட்டது. சட்டப்பேர வையில் பேரவைத் தலைவருக்கு முன்பு பதவி ஏற்காத நிலையில், அவர்கள் மூவருக்கும் நேற்று முன்தினம் இரவு ஆளு நர் மாளிகையில் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத் தார்.
இப்பிரச்சினை தொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரியில் கொல்லைப்புறமாக, ரகசியமாக பாஜகவை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. பாஜகவும், ஆளுநரும் இணைந்து ஜன நாயக படுகொலையை செய் துள்ளனர். இதற்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பளிக்கும் என எதிர் பார்க்கிறேன்.
மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் அரசு மீது ஆளுநர் பழி சுமத்தினார். சென்டாக்கில் ஊழல் என்று கூறிய ஆளுநரின் கருத்து பொய்யாகியிருக்கிறது. நீதி மன்றமே அதை நிரூபித்துள்ளது. இப்போது ஆளுநர் புதுச்சேரியை விட்டு வெளியேறுவாரா? டிவிட்டர், முகநூல் உள்ளிட்டவற்றில் இதற் கான பதிலை ஆளுநர் இன்றே தெரிவிக்க வேண்டும்.
டெபாசிட் வாங்காமல், வெறும் 1,200 வாக்குகள் பெற்றவரை (புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன்) தற்போது நியமன எம்எல்ஏவாக்கியுள்ளார். இதன்மூலம் துணை நிலை ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். புதுச்சேரி மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார். மாநில வளர்ச்சிக்காக புதுச்சேரிக்கு கிரண்பேடி வரவில்லை. பாஜகவை வளர்க்கவே புதுச்சேரிக்கு வந்துள்ளார். விதிகளை மீறி ஆளுநர் கிரண்பேடி செயல்படுவது தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் தெரிவிப்பேன் என்று கூறினார்.
விதிகளை படியுங்கள்: கிரண்பேடி
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்-அப் மற்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் சட்டப்படி நடைபெற்றதுதானா என பலருக்கு சந்தேகம் உள்ளது. யூனியன் பிரதேசத்தில் 3 நியமன எம்எல்ஏக்களை யூனியன் பிரதேச சட்டத்தின்படி மத்திய அரசு நியமிக்கும். அது மட்டுமே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான நபர்களின் பெயர்களை புதுவை அரசுக்கு அனுப்புகிறது. அது மாநில அரசிதழில் வெளியிடுகிறது. இந்த நியமனத்திலும் அவ்வாறே நடந்தது. யூனியன் பிரதேசத்தின் தலைமை நிர்வாகி நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிராமணம் செய்யலாம். யூனியன் பிரதேச சட்டத்தில் இதுகுறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் அதை படித்து அறியலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.