

சினிமா டிக்கெட் மீதான 30 சதவித கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக திரையுலக அமைப்புகள், அரசுடன் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இதில் தமிழக அரசு சார்பில் பல்வேறு துறை செயலாளர்கள் பங்கேற்றனர். தமிழ் திரையுலகினர் சார்பில் தமிழ் திரைப்பட வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “திரைப்பட தயாரிப் பாளர்களுக்கு கேளிக்கை வரி கூடுதல் சுமையாக இருக்கும். ஆகவே அதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைத்துள்ளோம். இது குறித்த இறுதி முடிவை ஜூலை 24-ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில் அறிவிப்பதாக கூறியுள்ளனர். நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்!’’ என்றார்.
பெப்சி தலைவரும், இயக்குநரு மான ஆர்.கே.செல்வமணி கூறும் போது, “முதற்கட்ட பேச்சுவார்த் தையில் கேளிக்கை வரி, திரை யரங்க கட்டணம் மற்றும் திரைப்படத்துறையை ஒழுங்குப் படுத்துவது குறித்து பேசினோம். அவர்களுடைய கருத்தைத் தெரிவித்து, சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இதுகுறித்து நாங்களும் திரைப்பட வர்த்தக சபையில் கலந்து ஆலோசித்து, மீண்டும் 24-ம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம். அக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.