

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தைக்கு சொந்த மான கல்குவாரியில் நடத்தப்பட்ட சோத னையின் அடிப்படையில் அவரிடம் வருமான வரித்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.
விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது டிடிவி தினகரன் வெற்றிபெற பண பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை சின்னதம்பியின் கல் குவாரியிலும் சோதனை நடத்தப்பட்டது.
அது தொடர்பாக நேற்று, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சின்னதம்பியிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.