பி.ஆர்க். படிப்புக்கு ஆக.10-ல் தரவரிசை பட்டியல்

பி.ஆர்க். படிப்புக்கு ஆக.10-ல் தரவரிசை பட்டியல்
Updated on
1 min read

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பி.ஆர்க். படிப்பில் சேர விரும் பும் மாணவர்கள் ‘நாட்டா’ என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கடந்த ஆண்டு நாட்டா தேர்ச்சி யைக்கொண்டும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

நாட்டா தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண் ணிக்கை, இப்படிப் பில் உள்ள இடங்களை விட குறைவாக உள்ளது. இதைத் தொடர்ந்து, ‘நாட்டா’ தேர்வைப் போன்று தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த உள்ளது.

இதில் தேர்ச்சி பெறுவோரும் பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப் பிக்கலாம். இதற்கு அகில இந்திய கட்டிடக் கலை கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இத்தேர்வு இந்த மாத இறுதிக்குள் நடத்தப்படும். பி.ஆர்க். படிப்புக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 19-ல் கலந்தாய்வு நடைபெறும் என்றார்.

தமிழகத்தில் பிஆர்க் படிப்பில் 2,720 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வருகின்றன. இவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in