

உள்ளாட்சித் தேர்தலில் காங் கிரஸ் கட்சி சார்பில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் அதிகளவில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை அக்கட்சி தொடங்கி இருக்கிறது. ‘ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்’ (ஆர்ஜிபிஆர்எஸ்) அமைப்பின் மூலமாக இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
2004-ல் சோனியா காந்தியால் தொடங்கப்பட்டு முன்னாள் எம்பி மீனாட்சி நடராஜன் தலைமையில் செயல்படும் இந்த அமைப்பில் தற்போது மாநில, மாவட்ட, ஒன்றிய வாரியாக பொறுப்பாளர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ஆர்ஜிபிஆர்எஸ் அமைப் பின் தமிழக அமைப்பாளர் செங்கம் ஜி.குமார் கூறும்போது, ‘‘சிறந்த தலைவர்களைப் பஞ்சாயத்து ராஜில் இருந்து கண்டறிவதும், அதன் மூலம் அதிக எண்ணிக்கை யிலான காங்கிரஸாரை உள்ளாட்சிப் பொறுப்புகளில் அமர்த்துவதும் தான் எங்களின் முக்கிய நோக்கம்.
இதன்படி, தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு முதல் கட்டப் பயிற்சிகளை அளித்திருக்கி றோம். சேலம், நாமக்கல் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களுக் கும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் களும் 10 மாவட்ட அமைப்பாளர் களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வட்டாரத் தலைவர்களுடன் இணைந்து, பஞ்சாயத்து அளவில் கூட்டங்களை நடத்துவர். அத்துடன் அந்தந்தப் பஞ்சாயத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட தகுதியான நபர்களை இந்தக் குழுவினரே அடையாளம் கண்டு எங்களுக்குப் பட்டியல் அனுப்புவார்கள்.
இதன்படி, 12 ஆயிரத்து 524 பஞ்சாயத்துத் தலைவர்கள், 99 ஆயிரத்து 324 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒன்றிய வாரியாகப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்’’ என்றார்.
புதுக்கோட்டை - சிவகங்கை மாவட்டங்களுக்கான மாவட்ட அமைப்பாளர் ஒய்.பழனியப்பனி டம், இதிலும் வழக்கம்போல் கோஷ்டிகள் தலைதூக்கினால்..?’ என்று கேட்டபோது, ‘‘பஞ்சாயத்து அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பது தான் ராகுல் காந்தியின் திட்டம். அதற்காகத்தான் இப்படியொரு சுதந்திரமான அமைப்பிடம் இந்தப் பணியை ஒப்படைத்திருக்கிறார். இதில் கோஷ்டிகளுக்கோ, ‘லெட்டர் பேடு’ களை மட்டுமே நம்பி அரசியல் செய்பவர்களுக்கோ இட மிருக்காது’’ என்று திட்டவட்டமாக கூறினார்.