மக்களவைத் தேர்தலில் அழகிரி வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம்

மக்களவைத் தேர்தலில் அழகிரி வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு எதிரான தேர்தல் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான வழக்கு முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மதுரையில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டும் மு.க. அழகிரி வெற்றி பெற்றார்.

அழகிரி வெற்றிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மு.க.அழகிரி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வெற்றி பெற்றதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது மோகன் இறந்துவிட்டதால், மாற்று வேட்பாளர் லாசர் இந்த வழக்கை தொடர்ந்து நடத்திவந்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் மு.க.அழகிரியின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in