

மேக தாதுவில் அணைக் கட்டவும், விவசாயக் கடன்களை வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காலை 5 மணிக்கு தொடங்கிய பந்த் மாலை மணிவரை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பை வாட்டல் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.
இந்த முழு அடைப்பின் காரணமாக தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக செல்லும் பேருந்து போக்குவரத்தும் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு வரும் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி வரை ஓசூர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் ஏதும் அனுமதிக்கப்படவில்லை. 7 மணிக்குப் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகளும் ஓசூர் - பெங்களூரு சாலையில் குறைந்த அளவிலேயே பயணிக்கின்றன.
இந்த முழு கடையடைப்பு காரணமாக கர்நாடகவில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.