

இந்தியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்திய தென்னாப் பிரிக்க அரசுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த வீரத் தமிழச்சிதான் தில்லையாடி வள்ளியம்மை. அந்த வீரநங்கையின் நூறாவது பிறந்த நாளும் நினைவு நாளும் பிப்ரவரி 22-ல் வருகிறது. இதற்காக ஏற்பாடாகும் நிகழ்ச்சிக்காக வள்ளி யம்மையின் உறவுகள் முதல்முறை யாக, தில்லையாடி மண்ணில் கால்பதிக்க வருகிறார்கள்.
காய்கனி வியாபாரியின் மகள்
நாகை மாவட்டம் தில்லையாடி யைச் சேர்ந்த மங்கலம் என்ற ஜானகியும் புதுச்சேரி முனுசாமி முதலியாரும் தென்னாப்பிரிக் காவில் காய் கனி வியாபாரம் செய்தவர்கள். இவர்களின் மகள் தான் தில்லையாடி வள்ளியம்மை. 1914-ல் தென்னாப்பிரிக்க அரசுக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கப் போராட் டத்தில் கலந்து கொண்டதால் 3 மாதம் சிறை தண்டனை பெற்றார். அதனால் உடல் நலன் பாதிக்கப்பட்டு விடு தலை செய்யப்பட்டார். விடுதலை யான 11-வது நாளில் வள்ளியம் மையை இயற்கை அழைத்துக் கொண்டது. அப்போது அவருக்கு வயது பதினேழு.
போற்றி வணங்கப்படும் வள்ளியம்மையின் கல்லறை
தென்னாப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க்கில் தில்லையாடி வள்ளி யம்மையின் கல்லறை இன்றைக் கும் போற்றி வணங்கப்படுகிறது. இந்தியா உள்ள வரையில் தென் னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித் திரத்தில் வள்ளியம்மையின் பெய ரும் நீங்கா இடம்பெறும்’என்கிறது காந்தியடிகளின் சுயசரிதை.
தென்னாப்பிரிக்காவுக்கு இந்தி யர்கள் குடிபெயர்ந்து 150 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் 2010-ல் தில்லையாடியில் விழா எடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்த தருமபுரியைச் சேர்ந்த வெளிநாடுவாழ் இந்தியர் நல ஆர்வலரான பாலசுந்தரம் தான், இப்போது வள்ளியம்மையின் உறவுகளை தில்லையாடிக்கு அழைத்து வருகிறார்.
தில்லையாடிக்கு வரும் வள்ளியம்மையின் உறவுகள்
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய பாலசுந்தரம், எங்க தந்தை யார் சுதந்திர போராட்ட தியாகி. நானும் காந்தியவாதி. என்னுடைய பிள்ளைகள் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார்கள். அதனால் அடிக் கடி நான் அங்கு போவேன். அப் போதுதான் தில்லையாடி வள்ளி யம்மையின் உறவுகளை சந்திக்க விரும்பி அந்நாட்டு பத்திரிகை ஒன்றில் கடிதம் எழுதினேன். அதைப் பார்த்துவிட்டு வள்ளியம்மையின் உறவுகள் என்னை தொடர்பு கொண்டார்கள். இது வள்ளியம்மை நூற்றாண்டு என்பதால் அவர்களை தில்லை யாடிக்கு வரவேண்டும் என்று அழைத்தேன்.
தட்டாமல் ஒப்புக்கொண் டார்கள். நான் அவர்களை நேரில் பார்த்ததில்லை. வள்ளியம் மையின் தம்பி பக்கிரி முதலியாரின் பேரன் பிரெக முனுசாமியும் அவரது மனைவி ரதி, மகள்கள் பிரணிதா, சரிஷா ஆகியோரும் 22-ம் தேதி தில்லையாடி வந்து வள்ளியம் மாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார் கள்.’’ என்று சொன்னார்.
முதல்வருக்கு கோரிக்கை
“இந்தியர்கள் தென்னாப்பிரிக் காவில் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, 2011-ல் சிறப்புத் தபால் தலை ஒன்றை தென்னாப் பிரிக்க அரசு வெளியிட்டது. ஆனால், இந்திய அரசு தென்னாப்பிரிக்க இந்தியர்களை கௌரவிக்கத் தவறிவிட்டது’ என்று சொல்லும் பாலசுந்தரம், “வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக கொல்கத்தா வில் உள்ளது போன்ற ஒரு கண்காட்சி அரங்கை சென்னை துறைமுகத்திலோ அல்லது தில்லை யாடியிலோ அமைக்க வேண்டும், தில்லையாடியில் மகளிருக்கான உயர் தொழில்நுட்பக் கல்லூரியை தொடங்க வேண்டும்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் மத்திய அமைச்சர் வயலார் ரவிக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். வள்ளியம்மைக்கு தமிழக முதல்வர் நிச்சயம் பெருமை சேர்ப்பார் என நம்புகிறோம்’ என்றார்.