

மதுரையில் எல்லா குடியிருப்பு பகுதிகளிலும் அரசு அறிவித் துள்ள கட்டணத்தைவிட கேபிள் டி.வி.க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். கொடுக்க மறுத்தால் கேபிள் இணைப் புகளை துண்டிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த காலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கேபிள் டிவியை அரசே தற்போது நடத்தி வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்படுகிறது. மாதாந்திரக் கட்டணமாக ரூ.70 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அதிகாரிகள் கண் காணிப்பு கடுமையாக இருந்ததால் கேபிள் ஆபரேட்டர்கள் அரசு நிர்ணயித்த தொகையையே வாங்கினர். தற்போது கூடுதலாக வசூலிக்கும் ஆபரேட்டர்கள் மீது புகார் கொடுத்தாலும், நடவடிக்கை இல்லை என புகார் எழுந்துள்ளது. அதனால், பொதுமக்களிடம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடந்த காலத்தைப் போல ரூ.130 முதல் ரூ.140 வரை கட்டணம் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் ‘தி இந்து’ உங்கள் குரல் மூலம் கூறியதாவது:
டி.வி.எஸ். நகர், எல்லீஸ்நகர், டிஆர்ஓ காலனி, புதூர், கேகே.நகர், சூர்யா நகர், அய்யர் பங்களா உள்ளிட்ட மதுரை நகர் முழுவதுமே கேபிள் டி.வி. இணைப்பு பெற்றவர்களிடம் மாதம்தோறும் ரூ.130 வரை வசூலிக்கின்றனர். இதில் டிடிஎச்சில் வரும் நிறைய சேனல்கள் தெரியவில்லை. சேனல்களும் தெளிவாக இல்லை. இதுகுறித்து ஆபரேட்டர்களிடம் கேட்டால், அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். எனவே, எல்லா சேனல்களும் கிடைக்கவும், அரசு கட்டணத்தைவிட கூடுதல் கட்ட ணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாவட்ட கேபிள் அதிகாரி கூறியதாவது: கேபிள் டி.வி.க்கு ரூ. 70 கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என நாங்கள், பலமுறை கேபிள் ஆபரேட் டர்களிடம் கூறியுள்ளோம். கூடு தல் கட்டணம் வசூலிப்பது தற்போது குறைந்துள்ளது. ஒருசில இடங்களில் இருந்து புகார்கள் வருகின்றன. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கட்டாயம் நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதிகாரிகள் ஒருபுறம் நடவ டிக்கை எடுப்பதாக தெரிவி த்தாலும், திரைமறைவில் ஆபரே ட்டர்களுடன் அவர்கள் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாகக் கூறப் படுதால், கூடுதல் கட்டணம் பகிரங்கமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனால், மாவட்ட நிர்வாகமே நேரடியாக தலையிட்டு அரசு நிர்ணயித்த கேபிள் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.