சென்னையில் 2,205 துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைப்பு

சென்னையில் 2,205 துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைப்பு
Updated on
1 min read

சென்னை: தேர்​தலை முன்​னிட்​டு, உரிமம் பெற்று வைத்துள்ள 2,205 பேர், தங்​களது துப்​பாக்​கி​களை போலீஸாரிடம் ஒப்​படைத்​துள்​ளனர்.

பாது​காப்பு கருதி தொழில் அதிபர்​கள், அரசி​யல் பிர​முகர்​கள், திரை பிரபலங்​கள் உள்பட பல்​வேறு தரப்​பினர் போலீ​ஸாரின் அனு​மதி பெற்று துப்​பாக்​கி​கள் வைத்​திருப்​பார்​கள்.

அதன்​படி, சென்​னை​யில் 2,735 பேர் வைத்​துள்​ளனர். இவர்​களில் 500 பேர் விளை​யாட்டு மற்​றும் பாது​காப்பு சேவை உள்பட பல்​வேறு காரணங்​களுக்​காக வைத்​துள்​ளனர்.

தேர்​தல் நேரங்​களில் உரிமம் பெற்று வைத்​துள்​ளவர்​கள் அந்த துப்​பாக்​கி​களை காவல்​துறை​யிடம் ஒப்​படைக்க வேண்​டும். ஆனால், விளை​யாட்டு மற்றும் சேவை துறை​யில் வைத்​திருப்​பவர்​கள் துப்​பாக்​கி​களை ஒப்​படைக்க தேவை​யில்​லை.

இதற்​கிடையே, 2,205 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்த நிலையில் 30 பேர் தங்​களிட​முள்ள துப்​பாக்​கி​களை உடனடி​யாக ஒப்​படைக்க வேண்​டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2,205 துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைப்பு
எண்ணூர் நிலக்கரி கிடங்கில் தீ விபத்து: 5 சதவீத நிலக்கரி சேதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in