எண்ணூர் நிலக்கரி கிடங்கில் தீ விபத்து: 5 சதவீத நிலக்கரி சேதம்

எண்ணூர் நிலக்கரி கிடங்கில் தீ விபத்து: 5 சதவீத நிலக்கரி சேதம்
Updated on
1 min read

சென்னை: எண்ணூர் நிலக்​கரி கிடங்​கில் நேற்று அதி​காலை தீ விபத்து ஏற்​பட்​டது. இந்த விபத்​தில் 5 சதவீத நிலக்​கரி சேதமடைந்​த​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னையை அடுத்த எண்​ணூர் மற்​றும் அத்​திப்​பட்டு பகு​தி​யில் தமிழக மின்வாரி​யத்​துக்கு சொந்​த​மான அனல்மின் நிலை​யங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த அனல்மின் நிலை​யங்​களுக்​காக நிலக்​கரி எண்​ணூரில் உள்ள கிடங்​கில் சேமித்து வைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை 3 மணி​யள​வில் இந்த நிலக்​கரி கிடங்​கில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து, நிலக்​கரி மையத்​தில் உள்ள தீயணைப்பு வாக​னங்​கள் மற்​றும் மணலி, மாதவரம், எண்​ணூர், எஸ்​பிளனேட், திரு​வல்​லிக்​கேணி உள்​ளிட்ட தீயணைப்பு நிலை​யங்​களில் இருந்து வாக​னங்​கள் கொண்டு வரப்​பட்டு தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​படுத்தப்​பட்​டன.

இதையடுத்து, காலை 6 மணிக்​குள்​ தீ கட்​டுக்​குள் கொண்​டு ​வரப்​பட்​ட​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். தமிழ்​நாடு மின்வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்​கொண்​டு, அதி​காரி​களிடம் சேத விவரங்​கள் குறித்து கேட்​டறிந்​தார்.

தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: இந்த சம்​பவத்​தால் மின் உற்​பத்​தி​யில் எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. ஆரம்​பக்​கட்ட கணிப்​பின் படி சேதம் 5 சதவீதத்​துக்​கும் குறை​வாக உள்​ளது. உள்​நாட்டு நிலக்​கரி 28 நாட்​களுக்கு போது​மான அளவில் கையிருப்​பில் உள்​ளது.

மகாநதி மற்​றும் சிங்​கரேணி நிலக்​கரி சுரங்​கங்​களி​லிருந்து தொடர்ந்து நிலக்கரி கொண்டு வர ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. 10 கப்​பல்​கள் மூலம், சீராக நிலக்​கரி விநி​யோகம் உள்​ளது.

மேலும், இறக்​குமதி செய்​யப்​பட்ட நிலக்​கரி 75 நாட்​களுக்கு போது​மான அளவில் கையிருப்​பில் உள்​ளது. உயி​ரிழப்​பு, காயம் எது​வும் இல்​லை.

மொத்​தம் 11 தீயணைப்பு வாக​னங்​கள் மற்​றும் 19 டேங்​கர்​கள் பயன்​படுத்​தப்​பட்டு தீ அணைக்​கப்​பட்​டது. தீயணைப்​புத் துறை, மெட்ரோ வாட்​டர் உள்​ளிட்ட அனைத்து துறை​களின் ஒருங்​கிணைந்த செயல்​பாடு மூலம் நிலைமை திறம்பட கையாளப்​பட்​டது.

தொடர்ந்து கண்​காணிப்பு மற்​றும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in