

மதுரையில் வடக்கு காவல் போக்குவரத்து பிரிவு விரிவாக்கத் துக்கு ஏற்ப போலீஸாரின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை நகரின் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிர்வாகத்தை வைகைக்கு தெற்கு, வடக்கு என இரு சப்-டிவிஷன்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இரு உதவி ஆணையர்களின் கீழ் ஆய்வாளர்கள், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் செயல்படுகின்றனர்.
வடக்கு போக்குவரத்து பிரிவு தல்லாகுளம், அண்ணாநகர் சப்-டிவி ஷனுக்கு உட்பட்ட பகுதிகளிலும், தெற்கு போக்குவரத்து பிரிவு திலகர்திடல் சப்-டிவிஷனுக்கு உட்பட கரிமேடு, எஸ்.எஸ்.காலனி ஆகிய காவல் நிலைய எல்கைக்கு உட்பட பகுதிகளிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
வடக்கு போக்குவரத்து பிரிவில், போக்குவரத்து அதிகமுள்ள கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம் உட்பட 10-க்கும் மேற்பட்ட முக்கிய பகுதிகள் வருகின்றன. இப்பிரிவில் 120-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது 100-க்கும் குறைவானவர்களே உள்ளனர். இவர்களிலும் சிலர் நீதிமன்றம், ஆர்டிஓ அலுவலகம், ஆய்வாளர் அலுவலக பணிகளை கவனித்து வருவதால், 50 சதவீதம் பேர் மட்டுமே போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் காலை, மாலை நேரங்களிலும், பகல் முழுவதும் வாகனப் போக்குவரத்து பரபரப்பாக காணப்படும் கோரிப் பாளையம், புதூர், குருவிக் காரன் சாலை உள்ளிட்ட பகுதிகளி லும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதில் சிரமத்தை சந் தித்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள் ளனர். எனவே, காலியாக உள்ள ஆய்வாளர், எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்பவும், கூடுதல் காவலர்களை நியமிக்கவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் மணிவண்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் சிலர் கூறியது: மதுரை நகரில் காவல் எல்லை விரிவாக்கத்தால் போக்குவரத்து பிரிவு எல்லையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. விளாங்குடி பரவை காய்கறி மார்க்கெட் முதல் உயர்நீதிமன்ற மதுரை கிளை, நத்தம் சாலையில் யாதவா கல்லூரி, குலமங்கலம், கூடல்புதூர், கள்ளந்திரி, வண்டியூர் ரிங் ரோடு வரை தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு எல்லை விரிவடைந்துள்ளது. நகரில் தினமும் அதிக அளவில் வாகனங்கள் கடக்கும் பகுதி கோரிப்பாளையம். அதற்கேற்ப கூடுதல் போலீஸாரை இங்கு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, தல்லாகுளம் (வடக்கு) போக்குவரத்து பிரிவு தனியாக பிரித்தபோது, உருவாக்கிய போலீ ஸார் எண்ணிக்கையே தற்போதும் உள்ளது. விரிவாக்கத்துக்கு ஏற்ப போலீஸார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
தற்போது 5 ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணியை 3 பேரும், 6 எஸ்ஐக்களுக்கு பதிலாக 3 பேரும் உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பற்றாக்குறை உள்ளது. தல்லா குளத்தை ஒப்பிடும்போது, தெற்கு போக்குவரத்து பிரிவில் ஓரளவுக்கு தேவையான காவலர்களும், ஆய் வாளர்களும் உள்ளனர். மதுரை யின் வடக்கு பகுதியில் தொய் வின்றி போக்குவரத்தை ஒழுங்கு படுத்த கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என்றனர்.