நேபாளத்தில் மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ள 219 தமிழர்கள் இன்று நள்ளிரவு சென்னை திரும்புவார்கள்: அமைச்சர் தகவல்

சென்னை குரோம்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், வெள்ளம் பாதித்த நேபாளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களது குடும்பத்தினரை அமைச்சர் வெங்கட் ரமணன் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை குரோம்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், வெள்ளம் பாதித்த நேபாளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களது குடும்பத்தினரை அமைச்சர் வெங்கட் ரமணன் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். படம்: எம்.முத்துகணேஷ்

Updated on
1 min read

சென்னை: நே​பாள வெள்​ளத்​தில் சிக்​கிய பிறகு மீட்​கப்​பட்ட 219 தமி​ழர்​கள் இன்று நள்​ளிர​வுக்​குள் சென்னை வந்​தடை​வார்​கள் என்று அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

நேபாளத்​தின் ரசுவா மாவட்​டத்​தில் உள்ள போடே கோசி மற்​றும் திரிசூலி ஆறுகளில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி வரலாறு காணாத வெள்​ளப்​பெருக்​கு ஏற்பட்டது. இதில் சுற்றுலா சென்ற ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்​களைத் தேடும் பணி முழு வீச்​சில் நடை​பெற்று வரு​கிறது.

இந்நிலையில் கும்​பகோணத்​தில் இருந்து கைலாஷ் யாத்​திரை சென்ற 57 பேரில் 21 பேர் ராணுவத்​தின் உதவி​யுடன் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு கடந்த 28-ம் தேதி டெல்லி வழி​யாக விமானம் மூலம் சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இதற்​கிடை​யில், தனி​யார் ஆன்​மிக சுற்​றுலா நிறு​வனம் மூலம் கடந்த 14-ம் தேதி கைலாஷ் யாத்​திரைக்​குச் சென்ற குரோம்​பேட்​டையைச் சேர்ந்த ஒரே குடும்​பத்​தின் 7 பேர் உள்​ளிட்ட 49 பேரின் நிலை குறித்து எந்​தத் தகவலும் கிடைக்​க​வில்​லை. இதனால் அவர்​களு​டைய உறவினர்​கள் ஜிஎஸ்டி சாலை​யில் நேற்று முன்​தினம் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதையடுத்து தமிழக அரசின் சார்​பில் அமைச்​சர் வெங்கட ரமணன் மற்​றும் பல்​லா​வரம் எம்​எல்ஏ காமாட்சி ஆகி​யோர் நேபாளத்​தில் சிக்​கிய 7 பேரின் உறவினர்​களை நேற்று சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தனர். அப்​போது அரசு மேற்​கொண்டு வரும் தீவிர மீட்பு நடவடிக்​கை​கள் குறித்து அமைச்​சர் விளக்​கி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் வெங்கட ரமணன் கூறுகை​யில், “நே​பாளத்​தில் உள்ள தமி​ழர்​களை மீட்​கும் நடவடிக்​கை​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

மீட்​புக் குழு​வினர் பல்​வேறு பகு​தி​களுக்​குச் சென்​று, ஓட்​டல்​கள் உள்​ளிட்ட இடங்​களில் தமி​ழர்​கள் தங்​கி​யுள்​ளார்​களா என்​பதை ஆய்வு செய்து வரு​கின்​ற​னர். மீட்​கப்​படு​பவர்​களின் விவரங்​கள் உடனுக்​குடன் பட்​டியலிடப்​படு​கின்​றன. காணா​மல் போன​வர்​களை​யும் விரை​வில் கண்​டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது” என்று தெரி​வித்​தார்.

இதற்​கிடை​யில் டெல்​லி​யில் முகாமிட்​டிருந்த அமைச்​சர்​கள் குழு​வில் தென்​னரசு தவிர மற்ற அனை​வ​ரும் சென்னை திரும்​பினர். சென்னை விமான நிலை​யத்​தில் அமைச்​சர் ராஜ்மோகன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமி​ழ​கத்​தில் இருந்து நேபாளம் சென்ற 319 பேரில் 219 பேர் பாது​காப்​புடன் உள்​ளனர். அவர்​கள் அனை​வ​ரும் 31-ம் தேதி (இன்​று) நள்​ளிர​வுக்​குள் சென்னை வந்​தடை​வார்​கள்.

காணா​மல் போன குரோம்​பேட்​டையைச் சேர்ந்த 49 பேர் உட்பட எஞ்​சிய 100 பேரைத் தேடும் பணி முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளது. அடை​யாளம் தெரி​யாத சடலங்​கள் குறித்த விவரங்​களை உறு​திப்​படுத்​தும் பணி​களும் நடை​பெற்று வரு​கின்​றன. சென்​னை​யில் இருந்து பெங்​களூரு வழி​யாக​வும் சிலர் நேபாளம் சென்று உள்​ளனர். மத்​திய அரசின் மூல​மாக, அவர்​களை விரை​வாகக் கண்​டு​பிடிக்​கும் பணி​யும் நடந்து வரு​கிறது. இவ்​வாறு அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>சென்னை குரோம்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், வெள்ளம் பாதித்த நேபாளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களது குடும்பத்தினரை அமைச்சர் வெங்கட் ரமணன் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். படம்: எம்.முத்துகணேஷ்</p></div>
இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையே 11 ஒப்பந்தம்: பிரதமர் மோடி, அதிபர் ஷவ்கத் முன்னிலையில் கையெழுத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in