

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை மத்திய ஆட்சி மொழியாக்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட சீத்தாகாந்த் மகாபாத்ர குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு தமிழ், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மேலும் ஆறு மாநில மொழிகளிலும் பிரதமர் அலுவலகத்தைத் இ-மெயிலில் தொடர்பு கொள்ளும் வசதி அண்மை யில் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில அரசுகளும் பிராந் திய மொழிகளில் மத்திய அரசைத் தொடர்பு கொள்ள மும்மொழி தகவல் தொடர்பு கொள்கையை வகுக்க 17 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கடந்த வாரம் அமைத்தது.
இதன்மூலம் மாநில மொழிகளுக்கு சிறப்பு கவுரவம் கிடைக்கும் என்று சொல் லப்படும் நிலையில், ‘மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழிகளையே ஆட்சி மொழியாக செயல்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கை வலுக்கிறது.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய முன்னாள் துணைவேந்தரும் தமிழக உயர்கல்வி பெருமன்றத்தின் முன்னாள் துணைத் தலைவருமான பேராசிரியர் அ.ராமசாமி, ‘‘மைய ஆட்சிமொழி சிக்கலுக்கு தீர்வு சொல்லும் வகையில் 'Struggle For Freedom Of Languages In India' என்ற தலைப்பில் ஏற்கெனவே நான் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன். அதில் நான் சொல்லி இருப்பது போலத்தான் இத்தாலி, ஸ்பெயின், ஈராக் ஆகிய நாடுகளில் மாநில மொழிகளுக்கு ஆட்சிமொழி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் தமிழ், மலையாளம் (மாஹே), தெலுங்கு (ஏனாம்), ஆங்கிலம், பிரெஞ்சு என ஐந்து மொழிகள் மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக உள்ளது. அது போல தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். இங்குள்ள மத் திய அரசு அலுவலகங்கள் டெல்லியோடு பேசுவதற்கு ஆங்கிலத்தையும் இந்தி யையும் பயன்படுத்தட்டும். நம்மோடு தமிழில்தான் பேசவேண்டும். இப்படித் தான் தமிழை படிப்படியாக ஆட்சி மொழியாக்க முடியும்.
2004-ல், முன்னாள் முதல்வர் கருணா நிதியின் வேண்டுகோளை ஏற்று, தமி ழுக்கு செம்மொழி அந்தஸ்து, தமிழ் ஆட்சிமொழி இந்த இரண்டு கோரிக்கைகளையும் குறைந்தபட்ச செயல்திட்டத் தில் சேர்த்தது யு.பி.ஏ. அரசு. இதற் கிடையில், தமிழ் ஆட்சி மொழி குறித்து, 2009-ல் சென்னையில் மாநாடு நடத்தினோம். அதன் தீர்மானங்களை மத்திய அரசுக்கு அனுப்பியபோது, ‘தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்குவது தொடர்பாக ஒடிசாவின் மொழியியல் அறிஞர் சீத்தா காந்த் மகாபாத்ர தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. அது பரிசீலனையில் உள்ளது’ என மத்திய உள்துறை அமைச் சகம் எங்களுக்குத் தகவல் தந்தது.
அறிக்கையின் விவரங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டேன். ஆனால், ‘அறிக்கை பரிசீலனையில் இருப்பதால் வெளியிட முடியாது’ எனச் சொல்லிவிட்டார்கள். 6 வருடங்களாக வெளியிடாமல் கிடப்பில் வைத்திருக் கும் அறிக்கையை மத்திய அரசு, உடனடி யாக வெளியிடுவதுடன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவும் நடவடிக்கை வேண்டும்’’ என்றார்.