

தமிழக விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்துக்கு பிரதமரே கார ணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினார்.
திருவாரூரில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: டெல்லியில் கடந்த 28 நாட்களாக நடைபெற்றுவரும் தமிழக விவ சாயிகளின் போராட்டத்தை பிரதமர் கண்டுகொள்ளாததால், ஆத்திரத்தில் நிர்வாணப் போராட் டம் நடத்தும் நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்ட னர். இந்த மாதிரியான போராட் டத்தை நடத்தலாமா, கூடாதா என்பதைவிட, தமிழக விவசாயி களின் கோரிக்கைகளை மத்திய அரசு இப்படி புறக்கணிக்கலாமா என்றுதான் சிந்திக்க வேண்டும். அதுபோல, தமிழக அரசும் விவ சாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.
அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டமாக அறி வித்துவிட்ட நிலையில், விவசாயி களின் கடனை தள்ளுபடி செய் யாமல், மத்திய கால கடனாக மாற்றியுள்ளனர். இதனால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விவசாயிகளின் பிரச்சி னைக்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
டெல்லியில் விவசாயிகள் முழு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்கு மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கவும், அவர்களை அழைத்துப் பேசவும் பிரதமர் மோடி மறுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று டெல்லி காவல் துறையினர் பிரதமரை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி விவசாயிகளை ஏமாற்றியதை கண்டித்து, பிரதமர் அலுவலக வாயிலிலேயே விவ சாயிகள் நிர்வாணப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசே முழு பொறுப் பேற்க வேண்டும்.
மத்திய அரசின் நடவடிக்கை யால் தமிழக விவசாயிகள் அவமானப்படுத்தப்பட்டு உள்ள னர். தமிழக விவசாயிகள் இதற்கு மேலும் போராட் டத்தை தொடர்வது நல்லதல்ல. மத்திய அரசை நம்பி அவமானப் பட்டதுதான் மிச்சம். எனவே, டெல் லியில் போராடும் விவசாயிகள் தமிழகத்துக்கு திரும்பி, மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் வகையிலான போராட்டங்களை இங்கு தொடங்குவோம் என்றார்.