

நாங்கள் தான் நாட் டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத் தோம். எங்களுக்கே பேசுவதற்கு வாய்ப் பில் லையா என்று காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஹெச். வசந்தகுமார் கேட்ட தால் சட்டப்பேரவை யில் சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் நேற்று ஜவுளி மற்றும் கதர்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில், காங்கிரஸ் கட்சி சார்பி்ல் நான்குநேரி எம்எல்ஏ ஹெச்.வசந்தகுமார் பேசும் போது, பேரவையை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழி நடத் திக் கொண்டிருந்தார்.
எங்களுக்கு மட்டும் குறைந்த நேரமா?
ஹெச். வசந்தகுமார் பேச்சைத் தொடங் கிய போது, குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித் துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டது. அப்போது, “நாட்டுக்கு சுதந்திரம் வாங் கிக் கொடுத்ததே நாங்கள். எங்களுக்கே பேச வாய்ப்பில்லையா?’’ என வினவினார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. இதைத் தொடர்ந்து பேசும்போது, ‘‘அதிமுக, திமுகவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது. எங்களுக்கு மட்டும் குறைந்த நேரம் ஒதுக்குகிறீர்கள்” என்றார்.