

ராமமோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையில் விதிமீறல்கள் எது வும் இல்லை என்று வருமான வரித்துறை விளக்கம் அளித் துள்ளது.
முன்னாள் தலைமைச் செய லாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:
சேகர் ரெட்டிக்கும், ராமமோகன ராவின் மகன் விவேக்குக்கும் தொழில் ரீதியாக தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ள நிலை யில், அவருடன் தொடர்புடைய நபர்கள் வீட்டிலும் சோதனை நடத்தினோம். எனவே, விவேக் வீட்டில் சோதனை நடத்த ‘வாரன்ட்’ பெறப்பட்டது. அந்த வாரன்டை வைத்துதான் மற்ற இடங்களிலும் சோதனை நடத்தினோம்.
சோதனைக்கு உட்படுத்தப்படும் நபரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் விவேக் கின் தந்தை என்ற அடிப்படையில் ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப் பட்டது. அதற்கான அதிகாரம் வருமான வரித்துறைக்கு உள்ளது.
சோதனையின்போது பாது காப்புக்காக மட்டுமே துணை ராணுவத்தை பயன்படுத்தினோம். யாரையும் மிரட்டுவதற்காக அல்ல. பிற மாநிலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது பலமுறை துணை ராணுவத்தினரை பயன்படுத்தி உள்ளனர். துணை ராணுவத்தை பயன்படுத்தக் கூடாது என்று எந்த விதியும் இல்லை.
ராமமோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்துவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று கேட்கின்ற னர். அந்த அனுமதி டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்டது. அந்த அனுமதியின் பேரில்தான் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு யாரிடமும் தகவல் தெரிவிக்கவோ, அனுமதி பெற வேண்டிய அவசியமோ இல்லை. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் தலை மைச் செயலகத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் எந்த இடத் திலும் சோதனை நடத்த வருமான வரித்துறைக்கு முழு சுதந்திரம் உண்டு. சோதனைக்கு முன்பு யாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. சட்ட விதிமுறைகளை பின்பற்றிதான் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.