காய்ச்சல், சளி ஜீரண மண்டல பாதிப்புக்கான 218 மருந்துகள் போலியானவை: ஆய்வில் உறுதி

காய்ச்சல், சளி ஜீரண மண்டல பாதிப்புக்கான 218 மருந்துகள் போலியானவை: ஆய்வில் உறுதி
Updated on
1 min read

சென்னை: ​காய்ச்​சல், சளி, ஜீரண மண்டல பாதிப்​பு, கிரு​மித் தொற்று உள்​ளிட்ட பிரச்​சினை​களுக்​கான 215 மருந்துகள் தரமற்​றவை​யாக​வும், 3 மருந்துகள் போலி​யானவை​யாக​வும் இருந்​தது மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் அனைத்து மாத்​திரை, மருந்​துகளும் மத்​திய - மாநில மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யங்​கள் மூலம் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

அந்த ஆய்​வின்​போது தரமற்ற மற்​றும் போலி மருந்துகள் கண்​டறியப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட உற்​பத்தி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதன்​படி, கடந்த மாதத்​தில் மட்​டும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்து மாதிரி​கள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டன.

அதில், காய்ச்​சல், சளி, கிரு​மித் தொற்​று, ஜீரண மண்டல பாதிப்பு உள்​ளிட்ட பிரச்​சினை​களுக்கு பயன்​படுத்​தப்​படும் 215 மருந்துகள் தரமற்​றவை​யாக​வும், 3 மருந்துகள் போலி​யானவை​யாக​வும் இருந்​தது கண்​டறியப்​பட்​டது.

அந்த மருந்​துகளின் விவரங்​களை மத்​திய மருந்து தரக் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் https://cdsco.gov.in/ என்ற இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. சம்​பந்​தப்​பட்ட மருந்து உற்​பத்தி நிறு​வனங்​களுக்கு விளக்​கம் கேட்டு நோட்​டீஸும் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

காய்ச்சல், சளி ஜீரண மண்டல பாதிப்புக்கான 218 மருந்துகள் போலியானவை: ஆய்வில் உறுதி
சென்னை | தகராறு குறித்து விசாரிக்கச் சென்ற உதவி ஆய்வாளர், காவலரை தாக்கிய இருவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in