மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Updated on
1 min read

யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறவுள்ள பகுதியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானிக் கரையோரத்தில் ஜன. 7-ல் தொடங்கி 48 நாட்கள் நடக்க உள்ளது. தற்போது காட்டு யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால், கூட்டம் கூட்டமாக யானைகள் மேட் டுப்பாளையம் வனப் பகுதியை கடந்தபடி உள்ளன.

சிறப்பு பாதுகாப்பு

முகாமுக்கு வரும் கோயில் யானைகளை காட்டு யானைகள் தாக்கும் ஆபத்து உள்ளதாலும், கடந்த முகாம்களின்போது இது போன்ற அசம்பாவிதங்கள் நடந் துள்ளதாலும், இம்முறை இதனை தடுக்கும் வகையில் சிறப்பு பாது காப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாக முகாம் நடை பெறவுள்ள இடத்தை நேற்று ஆய்வுசெய்த வனத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

முகாமைச் சுற்றி இரண்டடுக்கு சோலார் மின்வேலி, 6 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள், முகா முக்கு உள்ளேயும் வெளியேயும் 24 மணி நேரமும் வனத்துறையைச் சேர்ந்த யானைத் தடுப்புக் காவலர்கள் 30 பேர், பாதுகாப்பு மற்றும் முகாம் பாதுகாப்புக்கு வாகனங்களில் தொடர்ந்து ரோந்துப் பணி என திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கள் தெரிவித்தனர்.

மாவோயிஸ்ட்கள் நடமாட்டம்

முகாம் நடைபெறவுள்ள மேட்டுப்பாளையம் வனப் பகுதி, மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கேரளாவின் அட்ட பாடி வனப் பகுதி கிராமங்களை ஒட்டியுள்ளது. இதனால் பில்லூர், முள்ளி வழியாக அவர்கள் ஊடுரு வும் வாய்ப்புகள் உள்ளன. அதை தடுக்கும் வகையில் இரு மாநில எல்லையோர வனங்களில் கண் காணிப்பும், தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in