

ஒரே மாதிரியான தேர்வின் அடிப் படையில் பணிக்கு தேர்வு பெறும் தீயணைப்புத் துறை ஊழியர் களுக்கு காவல், சிறைத் துறைக்கு இணையான பதவி மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்காத நிலை தொடர்வதாகவும், சட்டப் பேரவையில் இன்று காவல், தீய ணைப்புத் துறை மானியக் கோரிக் கையின்போது இது தொடர்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பதாகவும் ‘தி இந்து உங்கள் குரல்’ தொலைபேசி எண் ணில் ஊழியர்கள் தெரிவித்துள்ள னர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் பணிபுரியும் காவலர், சிறைத் துறை ஊழியர், தீயணைப்புத் துறை ஊழியர் ஆகியோர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒரே மாதிரி யான கல்வித் தகுதி நிர்ணயிக் கப்படுவதுடன், உடற்கூறு தேர்வு, எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவை ஒரே மாதிரியாக நடத்தப்பட்டு, ஒவ்வொரு துறைக் கும் ஊழியர்கள் தேர்வாகின்றனர். 3 துறைகளிலும் பணியில் சேரும் தொடக்க காலத்தில் ரூ.1,900 என்ற தர ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.
அதன் பின் காவல் துறையில் காவலராக பணியாற்றுபவர், 10 ஆண்டுகளை கடந்தவுடன், முதல் நிலைக் காவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, தர ஊதியம் ரூ.2,400 ஆக உயர்த்தப்படுகிறது. 15 ஆண்டு கள் நிறைவடையும்போது, அடுத்த பதவி உயர்வு வழங்கப்பட்டு, தர ஊதியம் ரூ.2,800 ஆகவும், 25 ஆண்டுகள் நிறைவடையும்போது, சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டு, தர ஊதியம் ரூ.4,800 ஆகவும் உயர்த்தப்படுகிறது. சிறைத் துறையில் சேரும் ஊழியர்களும் இதேபோல பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பெற்று வருகின்ற னர். ஆனால், தீயணைப்புத் துறை ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கு இது போன்ற நடைமுறைகள் பின்பற் றப்படுவதில்லை என்கின்றனர் தீயணைப்புத் துறை ஊழியர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: எங்களோடு தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் காவலர் அடுத்தடுத்த பதவி உயர்வை பெற்று உயரும் நிலையில், தீயணைப்புத் துறை வீரர் என்ற நிலையில் இருந்து ஓட்டுநர் அல்லது முன்னணி தீய ணைப்போர் என்ற பதவி உயர்வை பெறுவதற்கு 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. நிலைய அலுவலர் பணியிடத்தில் தொடங்கி இதர உயர் பதவிகள் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடி தேர்வு பெறுவதால், இந்த வாய்ப்பும் பறிபோகிறது. பதவி உயர்வுக்கான பணி மூப்பு மாவட்ட அளவில் கணக்கிடாமல், மாநில அளவில் கணக்கிட்டால் இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.
சம்பளம், பதவி உயர்வில் மட்டு மின்றி 30 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட படிதான் இன்னும் எங்களுக்கு வழங்கப்படுகிறது. திருவிழா போன்ற நிகழ்வுகளுக்கு நிலை நிறுத்தும் பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 படியாக வழங் கப்படுகிறது. நீண்டகாலமாக தீர்க் கப்படாமல் உள்ள இந்த கோரிக் கைகளை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து சட்டப்பேரவையில் அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
காலிப் பணியிடங்களால் பாதிப்பு
தீயணைப்புத் துறைக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஊழியர்கள் தேர்வு செய்யப்படாத நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் வரும் நிலையில், தாங்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாவதாகவும், மீட்புப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் தீயணைப்புத் துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், பதிலுரையும் நடக்க உள்ளது. இந்நிலையில், தீயணைப்புத் துறையை நவீனமயமாக்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.