

அதிமுக மகளிரணி மாநில துணைச் செயலாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, இரண்டாம் கட்ட பிரச்சாரத்துக்கு இடையில் ‘தி இந்து-வுக்கு அளித்த பேட்டி:
அரசியல் கலப்பில்லாமல் சொல்லுங்கள், இந்தத் தேர்தலில் அதிமுக-வுக்கு சாதகமான சூழல் தெரிகிறதா?
என்ன சார் இப்டி கேட்டுட் டீங்க? மக்கள் மத்தியில அம்மா வுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு கல்வி உதவித் தொகை, சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி, 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாப்பாடு இதெல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பை தந்திருக்கு.
தொடக்கத்துல, ஜெயலலிதாதான் பிரதமர்னு சொன்னீங்க. இப்ப எங்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமையும்னு சொல்றீங்களே?
அடுத்த பிரதமர் நான்தான்னு அம்மா சொல்லல. ஆன, எங்க ளோட ஆசை அம்மா பிரதமராக ணும்னு. அவங்களோட சிந்தனை நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும்தான். அம்மா பிரதமரானால் வெளிநாட்டில் பதுக்கி வெச்சிருக்கிற பணம் லாம் இந்தியாவுக்கு வரும். ராஜபக்சேவை போர்க் குற்றவாளி யாக பிரகடனம் செய்யணும்னா அம்மா பிரதமரா வரணும்.
ஜெயலலிதா பிரதமராக வருவது அவ்வளவு எளிதா?
ஏன் சார் முடியாது? டெல்லியில இருக்கவங்க மட்டுமே பிரதமரா வர்றதில்லை. ஆந்திராவிலிருந்து நரசிம்ம ராவ் வரலியா? கர்நாடகாவிலிருந்து தேவகவுடா வர லியா? தமிழகத்திலிருந்துதான் இன்னும் யாரும் பிரதமராகல. மக்கள் ஆதரவோட அம்மா பிரதமராக வருவாங்க.
‘அதிமுக-வுக்கு நான்தான் எமன்’ என்று சொல்லும் விஜயகாந்த் இந்த முறையும் வலுவான கூட் டணியில் இடம்பிடித்து விட்டாரே?
அதிமுக-வுக்கு இல்லை, அவரு கட்சிக்கே அவருதான் இப்ப எமன். பிரச்சாரத்துக்கு போற இடத்துல எல்லாரையும் முறைக்கிறாரு. வண்டிக்குள்ள உக்காந்திருக்கிற வேட்பாளரை காலால் மிதிக்கிறது, கழுத்தைப் பிடிச்சு கோழி கணக்கா தூக்குறதுனு, இதெல்லாம் ஒரு தலைவனுக்கு அழகா சார்?
விருதுநகர் பிரச்சாரத்துல, ’சட்டமன்றத் தேர்தலில் வைகோ வுக்கு ஓட்டுப் போடுங்க’னு பேசிருக்காரு. இந்தத் தேர்தலில் வடிவேலு இல்லாத குறையை விஜயகாந்த் போக்கிட்டாரு. இவருக்கு வடிவேலு எவ்வளவோ பெட்டர்.
மின்வெட்டுப் பிரச்சினையை வைத்து ஆட்சியை பிடித்த அதிமுக, மூன்றாண்டுகளாகியும் அதை சரிசெய்யவில்லையே?
அம்மா ஆட்சியைவிட்டு இறங்குனப்ப 6 கோடி மக்களுக்கு மின்சாரம் தடையில்லாம கிடைச்சுது. திமுக ஆட்சியில மின் திட்டங்களை தொடங்காமல் விட்டதால், அதே அளவு உற்பத்தியாகும் மின்சாரத்தை இப்ப ஏழரைக் கோடி பேருக்கு குடுக்க வேண்டி இருக்கு. இதையெல்லாம் மறைச்சிட்டு அப்பா, புள்ள, பொண்ணு மூணு பேருமே பொய் சொல்றாங்க.
ஜெயலலிதா வானத்திலேயே பறந்துட்டு இருக்காங்க. அவங்களுக்கு மக்களோட கஷ்டம் தெரியாது என்று ஸ்டாலின் சொல்கிறாரே?
இவரு அடிக்கடி அமெரிக்காவுக்கு போறாரே, ஷேர் ஆட்டோவுலயா போறாரு. அம்மா முதல்வரா இருக்காங்க. அவங்களுக்கு ஏகப்பட்ட செக்யூரிட்டி அரேஞ்ச் மெண்ட்ஸ் இருக்கு.
அதைக் காரணம் காட்டி மக்களுக்கு இடைஞ்சல் உண்டாகக்கூடாதுன்னு அம்மா ஹெலி காப்டர்ல வர்றாங்க. சொந்தமா ஃப்ளைட் சர்வீஸே வெச்சிருக்கிற குடும்பம் இதையெல்லாம் பேசலாமா?