

‘‘பல்கலைக்கழக துணைவேந்தர் கள் நியமனம் நேர்மையாக நடக்கி றது. தவறு நடக்க வாய்ப்பு இல்லை’’ என்று என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரி வித்துள்ளார்.
தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரி வித்த கருத்துக்களுக்கு, அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான குறறச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. தமிழக பல்கலைக் கழகங்களில் படித்த மாணவர்கள், உலகப்புகழ் பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி, உயர்கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்திய அளவில் மாணவர்கள் சேர்க்கை சதவீதம் 23.6 சதவீதமாக உள்ளது. அதே அளவில் தமிழகத்தில் 44.8 சதவீதமாக உயர்ந்து முதன்மை இடத்தில் உள்ளது. துணைவேந்தர் கள் நியமனத்துக்கு தேடுதல் குழுவானது நியமிக்கப்பட்டுள்ளது. அதில், அண்ணா பல்கலைக்கழகத் துக்கு ஆளுநர் பரிந்துரை உறுப்பி னராக பேராசிரியர் எம்.பாஸ்கர், அரசு நியமன உறுப்பினராக ஐஏஎஸ் அதிகாரி ஹேமந்த்குமார் சின்ஹாவும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினரும் தியாகராசர் பொறி யியல் கல்லூரியி்ன் தலைவருமான கருமுத்து.தி.கண்ணனும் உள்ள னர். இந்த மூவர் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மூன்று தகுதியானவர் களை தேர்வு செய்து, ஆளுநருக்கு பரிந்துரைக்கிறார்கள். அவர்களில் ஒருவரை ஆளுநர் தேர்வு செய்து நியமிப்பார். அண்ணா பல் கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் கூடிய விரைவில் நியமிக்கப்பட உள்ளார். ஒளிவுமறைவின்றி நேர்மையான முறையில் தேர்வு நடக்கிறது. தேடுதல் குழுவிடம் அரசு எந்த கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதில்லை. எனவே, இதில் எந்தவிதமான தவறும் நடக்க வாய்ப்பில்லை.
அதே போல் சென்னை பல்கலைக்கழகத்துக்கும் தேடுதல் குழு உறுப்பினர்களில் ஒருவர் தற்போது பணியில் சேர்ந்து, தகுதியானவர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் சென்னை பல்கலைக்கழகத்துக்கும் துணை வேந்தர் நியமிக்கப்படுவார். பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் தொடர்ந்து அதிமுக ஆட்சி நடக்க கூடாது என்ற எண்ணத்தில் புகார் தெரிவித்து வருகிறார். தவறுகள் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்குரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.
நீட் தேர்வை பொறுத்தவரை, தமிழகத்தில் தேவையில்லை என்று கூறியுள்ளோம். மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. நானும், சுகாதாரத்துறை அமைச்சரும் டெல்லியில் சென்று அமைச்சரை சந்தித்தோம்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத தகுதியான சிபிஎஸ்இ படித்த மாணவர்கள் 3 ஆயிரத்து 700 பேர் தான். மற்றும் உள்ள 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் கிராமப் புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரி வாய்ப்புக்காக தகுதி யுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தியுள்ளோம். அதற் கான சட்ட முன்வடிவு அனுப்பப் பட்டுள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் வலியுறுத்தியுள்ளோம்.