நளினியின் விடுதலை குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நளினியின் விடுதலை குறித்து அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மத்திய பெண்கள் சிறையில் கடந்த 25 ஆண்டு களாக தண்டனையை அனுபவித்து வரும் நளினி, நல் லெண்ண அடிப்படையில் தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-படி ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட் டியே விடுதலை செய்ய முடியும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை தள்ளி வைக்க வேண்டும்’’ என கோரினார்.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கு தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in