

5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்கள் (மானியம் இல்லாதவை), இனி சூப்பர் மார்க்கெட் கடைகளில் கிடைக்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர்களை சூப்பர் மார்கெட்களிலும் விற்பனை செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதற் கட்டமாக சென்னை, பெங்களூர், கோரக்பூர், லக்னோ மற்றும் அலிகார் ஆகிய நகரங்களில் இத்திட்டம் ஆரம் பிக்கப்பட உள்ளது. இந்த காஸ் சிலிண்டர் களை விற்பனை செய்ய ‘‘கிரானா’’ எனும் விற்பனை மையங்கள் 5 நகரங்களில் 11 இடங்களில் தொடங்கப்படவுள்ளன.
‘கிரானா’ விற்பனை மையங்களில் மார்க்கெட் விலையிலேயே சிலிண்டர் களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நவீன சிலிண்டர்கள் மக்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. சிலிண்டரில் உள்ள எரிவாயு தீர்ந்து போனால், உடனடியாக ‘கிரானா’ விற்பனை மையங்களுக்குச் சென்று மறுபடியும் ‘ரீ பில்’ செய்து கொள்ளலாம்.
சிலிண்டர், காஸ் அடுப்பு, ரெகுலேட்டர் உள்பட மொத்த மதிப்புத் தொகையாக ரூ.1600 முதல் ரூ.1700 வரை நிர்ணயிக் கப்பட்டு உள்ளது. மேலும் பல நகரங்களில் இந்த ‘கிரானா’ மையங்களைத் தொடங்கு வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
5 கிலோ எடை கொண்ட இந்தச் சிலிண்டர்களைப் பெறுவதற்கு, புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்காளர் அட்டை, பாஸ்போர்ட், கல்வி நிறு வனத்தின் அடையாள அட்டை போன்ற ஏதேனும் ஒன்றின் நகலுடன் ‘கிரானா’ மையங்களைப் பொது மக்கள் அணுகலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.