தாம்பரம் பைபாஸ் சாலையில் புதர்களால் தொடரும் விபத்து

தாம்பரம் பைபாஸ் சாலையில் புதர்களால் தொடரும் விபத்து
Updated on
1 min read

தாம்பரம் முதல் புழல் வரையுள்ள பைபாஸ் சாலையோரமாக புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சாலையின் இருபுறமும் மண்டிக் கிடப்பதால் சாலை சுருங்கி காணப்படுகிறது. புதர்களால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த சாலையில் நடக்கும் விபத்தில் பெரும்பாலானவை புதர்களால் மறைக்கப்பட்ட பகுதிகளில் நடக்கிறது.

சமூக ஆர்வலர் ரஞ்சன் கூறுகையில், ‘‘பைபாஸ் சாலையில் புதர்களால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அந்த சாலையில் புதிதாக வரும் ஓட்டுநர்கள் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்குகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து முட்புதர்களை அப்புறப்படுத்த வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘புதர்களை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in