மெட்ரோ ரயில், குடிநீர் வாரிய பணிகள் ஆம்னி பேருந்து நிறுத்தம்: வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஜிஎஸ்டி சாலை

மெட்ரோ ரயில், குடிநீர் வாரிய பணிகள் ஆம்னி பேருந்து நிறுத்தம்: வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஜிஎஸ்டி சாலை
Updated on
2 min read

மெட்ரோ ரயில், குடிநீர் வாரியம், முறையற்ற வாகன நிறுத்தம் போன்ற வற்றால் கிண்டி முதல் தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு வருகிறது.

நகர விரிவாக்கம், மக்கள் தொகை பெருக்கம், அதனால் வாக னங்களின் எண்ணிக்கை உயர்வு இவற்றால், சென்னை ஏற்கெனவே கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி யுள்ளது. தற்போது மெட்ரோ ரயில், குடிநீர் குழாய் பதிப்பு, பாலப் பணிகளும் நடந்து வருவதால், பல சாலைகளில் காலை, மாலை நேரங் களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

இதில் குறிப்பாக, கிண்டி கத்திப் பாரா முதல் தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலையில் இரவு 9 முதல் இரவு 11 மணி வரை ஆங்காங்கே வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. காலையில் தாம்பரம்- கிண்டி வரை, தாம்பரம் பேருந்து நிலையம், குரோம்பேட்டை முதல் பல்லாவரம் வரை, விமான நிலையம் முதல் பரங்கிமலை ஓடிஏ (ராணுவ பயிற்சி அகாடமி) வரை என 17 கிலோ மீட்டர் தூரத்தில் பெரும்பாலான பகுதிகள் நெரிசலில் சிக்குவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இரவு நேரத்தில், சைதாப்பேட்டை அடுத்த கிண்டி ராஜ் பவனில் இருந்தே வாகன நெரிசல் தொடங்குகிறது. கிண்டி மேம் பாலம், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஓடிஏ, மீனம்பாக்கம் பகுதி, பல்லாவரம், குரோம்பேட்டை பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், இரவில் ஆலந்தூர் தபால் நிலையம் பகுதியில் செயல்படும் ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது தவிர, குரோம்பேட்டையில், கிண்டி நோக்கி செல்லும் சாலையின் ஒரு பகுதியில், பல்லாவரம் வரை, குடிநீர் குழாய் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

இப்பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எதிர்புறத்தில் இரவு நேரத்தில், பல்லாவரம் பேருந்து நிலையம், குரோம்பேட்டை பேருந்து நிலையம் பகுதிகளிலும் ஆம்னி பேருந்துகள் பல வரிசைகளாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

நகருக்குள் தனியார் ஆம்னி பேருந்துகள் போக்குவரத்தை கட்டுப் படுத்த நடவடிக்கைகள் எடுத்த போதி லும், ஆலந்தூர், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் இந்த பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரயில் பணிகள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைவில் முடித்து, வாகன போக்குவரத்துக்கு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, போக்குவரத்து திட்டமிடல் பிரிவு அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

ஜி எஸ்டி சாலையில் ஆம்னி பேருந்துகளை ஒழுங்குபடுத்த, கூடுத லாக போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்ட பணிகள் விரைவில் முடிந்துவிடும். இவை முடிந்துவிட்டால், சாலை நடுவில் தடுப்புகள் முறையாக அமைக்கப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும்.

தற்போது காலை நேரத்தில், ஆலந்தூர் சிமென்ட் சாலை முதல், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் பகுதி வரையிலான பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரி சலை குறைப்பதற்காக போக்கு வரத்து போலீஸார், ஒருவழிப் பாதை முறையை பயன்படுத்தி அதிகப்படியான வாகனங்கள் வரும் பாதையில் போக்கு வரத்தை சிறிது நேரத்துக்கு சரி செய்கின்றனர்.

பழவந்தாங்கல், ஆலந்தூரில் இருந்து ஜிஎஸ்டி சாலையில் இணை யும் சாலைகளுக்கான, மாற்றுச்சாலை கள் இல்லை. எனவே, அந்த இடங்களில் சிறிது நேரம் நிறுத்தி வாகனங்களை அனுமதிக்கத்தான் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in