

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
மாணவிகள் அபிசினேகா மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர். மாணவி அஜிபா ஹவ்வா 494, ஹரிணி, பாத்திமா, முருகலட்சுமி, அஜிமா, சிவமீனாட்சி, சுபிக்ஷா, வருண்ராஜ் ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
கணிதத்தில் 18, அறிவியலில் 22, சமூகஅறிவியலில் 59 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ தேர்வு
10-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளியில் தேர்வு எழுதிய 21 பேரும் ஏ-1 கிரேடில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நிகிதா, சாலினி சுபஸ்ரீ, அஜய் அரவிந்த், செண்பக வியாஷினி, ஸ்ரீஅஞ்சனா தேவி, சஞ்ஜிவினி, முகமது ஹனிபா, பிராத்தனா படேல், மதனகுமரன், அரவிந்த் நாராயணன் மற்றும் ஸ்வேதா ஆகியோர் 10-க்கு 10 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களை பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், முதல்வர் உஷா ரமேஷ் பாராட்டினர்.