

இறைச்சிக்காக மாடுகளை விற்ப தற்குத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி சென்னையில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உத்தரவு நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
சந்தையில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவு நகல் எரிப்புப் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காஞ்சிபுரம், திருவள்ளூர், வட சென்னை, தென்சென்னை புறநகர் மாவட்டக் குழு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் எதிரே சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி கோஷங் களை எழுப்பினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் அ.நாகப் பன், காஞ்சிபுரம் மாவட்ட செயலா ளர் கே.நேரு, வடசென்னை மாவட்ட செயலாளர் மா.தா.பால் ராஜ், தென்சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ம.சந்திரன், திருவள்ளூர் மாவட்ட செயலா ளர் அ.துளசிநாராயணன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரவு நகலைத் தீயிட்டுக் கொளுத்திய போது காவல்துறையினர் அவர் களைத் தடுத்து கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
முன்னதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகை யில், “விவசாயிகளிடம் உள்ள வயதான மாடுகள், பால் சுரப்பு நின்றுபோன மாடுகள், சினைபிடிக் காத மாடுகளை விற்பதைத் தவிர வேறு வழியில்லை. வியாபாரி களுக்கு விற்கக்கூடாது என்றால் அவற்றை அரசே வாங்கிக் கொள்ள லாம். மத்திய அரசின் உத்தர வைத் தொடர்ந்து அதிகாரிகளின் கெடுபிடியால் மாட்டு வாரச் சந்தைகளுக்கு வரும் மாடுகள் எண்ணிக்கை பெருமளவுக் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த உத்தரவை அமல்படுத்தமாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை செய்யும் உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.