சேகர் ரெட்டியின் மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு

சேகர் ரெட்டியின் மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு
Updated on
1 min read

சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் சட்டவிரோத மணல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் மார்ச் 10-க்கு தள்ளி வைக்கப்பட்டது.

வழக்கறிஞர் சூர்யா உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தற்போது அதிக எண்ணிக்கையில் சட்டவிரோத மணல் குவாரிகள் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அந்த மணல் குவாரிகளை இழுத்து மூட உத்தரவிட வேண்டும். மணல் குவாரி குத்தகைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது நீதிபதிகள் இந்த வழக்கில் ஏன் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பி, கூடுதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 10-க்கு தள்ளி வைத் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in