கண்டெய்னரில் ரூ.20 லட்சம் நாணயங்கள்

கண்டெய்னரில் ரூ.20 லட்சம் நாணயங்கள்
Updated on
1 min read

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் நேற்று காலை ஒரு கன்டெய்னர் லாரி சிக்னலில் நிற்காமல் வேகமாகச் சென்றது. போக்கு வரத்துப் போலீஸார் துரத்திச் சென்று பிடித்தபோது, லாரி டிரைவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

லாரிக்குப் பின்னால் பாது காப்பு வாகனம் ஒன்றும் வந்தது. அவர்களிடம் போலீஸார் விசாரித்ததில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நாணயங்களை கோவை 100 அடி சாலையில் உள்ள ஒரு வங்கிக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்துள் ளனர்.

லாரி ஓட்டுநர் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் மது போதையில் இருந்ததால் போக்குவரத்துப் போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தந்தனர். வங்கி அதிகாரிகள் அதற்கு உரிய ஆவணங்களை காட்டி, மாற்று டிரைவரை வரவழைத்து நாணயங்களை பத்திரமாக வங்கிக்கு எடுத்துச் சென்றனர்.

லாரி ஓட்டுநர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in