நாடாளுமன்றத் தேர்தலில் தொ.மு.ச?

நாடாளுமன்றத் தேர்தலில் தொ.மு.ச?
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவைக்கு (தொமுச) ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தொமுச-வின் தலைவராக இருந்த குப்புசாமியை முதன்முதலில் 1984 சட்டமன்றத் தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் நிறுத்தியது திமுக. அந்தத் தேர்தலில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த குப்புசாமி, அதன் பிறகு தேர்தல் களத்துக்கு வரவில்லை. தொமுச-விலிருந்து வேறு யாருக்கும் சீட்டும் தரப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1998 நாடாளுமன்றத் தேர் தலில் வடசென்னை தொகுதியில் குப்புசாமியை நிறுத்தியது திமுக. அந்தத் தேர்தலிலும் அடுத்து வந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் குப்புசாமி.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொமுச தரப்பில் போட்டியிட அதன் பொதுச்செயலாளர் சண்முகம், கட்சியில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். சைவ பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சண்முகத்தின் சொந்த ஊர் சுவாமிமலை அருகிலுள்ள பட்டவர்த்தி கிராமம். மயிலாடு துறை தொகுதியில் சைவ பிள் ளைமார்கள் கணிசமான அளவில் இருப்பதால், இங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்திருக்கிறார் சண்முகம். ஆனால், மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்பதால் சண்முகத்தை வேறொரு தொகுதியில் போட்டியிட மனு கொடுக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறதாம் தலைமை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in