நடிகர் ஆட்சி செய்தால் நாடு சீரழியும்: வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு கருத்து
நடிகர் ஆட்சி செய்தால் நாடு சீரழிந்து நாசமாகிவிடும் என வன்னியர் சங்கத் தலைவரும், பாமக முன்னாள் எம்எல்ஏவுமான ஜெ.குரு தெரிவித்துள்ளார்.
பாமக தொடர்ந்த வழக்கில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3 ஆயிரத்து 321 மதுக் கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தென் சென்னை கிழக்கு மாவட்ட பாமக சார்பில் மயிலாப்பூர் மாங் கொல்லையில் நேற்று பாராட்டு கூட்டம் நடைபெற்றது. ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத் தில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு பேசியதாவது:
ஜனநாயகத்தில் யார் வேண்டு மானாலும் நாடாளலாம். ஆனால், நாடாளத் துடிக்கும் நடிகர்கள் திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு செய்தது என்ன என்பதைத் தெரி விக்க வேண்டும்.
இயக்குநர்கள், தயாரிப்பாளர் கள் கட்டளைப்படி நடித்த நடிகர் களால் சுயமாக சிந்திக்க முடி யாது. கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் நடிகர் களும், திரைத் துறையைச் சார்ந்த வர்களும்தான் ஆட்சி செய்தார் கள். அதனால் நாடு சீரழிந்து நாச மாகிவிட்டது. நடிகர் ஆட்சி செய்தால் நாடு சீரழிந்து நாசமாகி விடும். நாட்டின் சீரழிவுக்கு திரைத் துறையினர்தான் காரணம். திரா விடக் கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ஜெ.குரு பேசினார்.
ரஜினி அரசியலுக்கு வர இருப் பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், நடிகர் ஆட்சி செய்தால் நாடு சீரழிந்துவிடும் என பாமக முக்கியத் தலைவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
