1967, 77 தேர்தலைப் போல புரட்சிக்கு வழிவகுத்த 2026 தேர்தல்: முன்பே கணித்த தவெக தலைவர் விஜய்

1967, 77 தேர்தலைப் போல புரட்சிக்கு வழிவகுத்த 2026 தேர்தல்: முன்பே கணித்த தவெக தலைவர் விஜய்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் 1967, 77 தேர்​தலைப்​போல 2026 தேர்​தலும் புரட்​சிக்கு வழி​வகுத்​துள்​ளது. இதை, தவெக தலை​வர் முன்பே கணித்து கூறியது குறிப்​பிடத்​தக்​கது. தவெக​வின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்​லபுரத்தை அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் கடந்த பிப்​ர​வரி மாதம் நடை​பெற்​றது.

அப்​போது பேசிய தவெக தலை​வர் விஜய், “1967, 1977 சட்​டப்​பேரவை தேர்​தல்​களைப் போல 2026 சட்​டப்​பேரவை தேர்​தலும் தமிழகத்​தில் புரட்​சிக்கு வழி​வகுக்​கும்” எனத் தெரி​வித்​தார். இவர் கணித்​தது போல், இன்​றைய தமிழக தேர்​தல் முடிவு​கள் அமைந்​துள்​ளன.

இந்​தியா சுதந்​திரம் பெற்ற 1947-ம் ஆண்​டுக்கு பிறகு நடை​பெற்ற தேர்​தலின்​போது, தமிழகம், ஆந்​திரம் உள்​ளிட்ட பகு​தி​கள் அடங்​கிய சென்னை மாகாணம் மற்​றும் மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்டு தமிழகம் உரு​வான பிறகும், தொடர்ந்து காங்​கிரஸ் ஆட்​சியே நடை​பெற்று வந்​தது.

இதில், இந்தி திணிப்​பு, குளக்​கல்வி திட்​டம் போன்ற தமிழக மக்​களுக்கு எதி​ரான திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வந்​தன. இந்​நிலை​யில், காங்​கிரஸை எதிர்த்து அரசி​யல் செய்து வந்த திமுக 1967 சட்​டப்​பேரவை தேர்​தலில் ஆட்​சியை பிடித்​து, தொடர் காங்​கிரஸ் ஆட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைத்​தது.

அதன் பிறகு, இன்று வரை தமிழகத்​தில் காங்​கிரஸால் ஆட்​சியை பிடிக்க முடிய​வில்​லை. அதனால், அந்த தேர்​தல் திருப்​பு​முனை தந்த தேர்​தலாக​வும், புரட்​சிக்கு வித்​திட்ட தேர்​தலாக​வும் அமைந்​தது.

திமுக​விலிருந்து வெளி​யேறிய எம்​ஜிஆர், 1972-ல் அதி​முகவை தொடங்​கி​னார். 1977-ல் முதல் சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலை சந்​தித்​தார். அப்​போது, திமுக மீது பெரும் ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் இருந்​தன.

இதையடுத்து, இந்த தேர்​தலில் தொடர்ந்து இரு முறை வென்ற திமுக ஆட்​சிக்​கும் முற்​றுப்​புள்ளி வைக்​கப்​பட்​டது. அதன் பிறகு, எம்​ஜிஆர் மறை​யும் வரை திமுக​வால் ஆட்​சிக்கு வரமுடிய​வில்​லை. தொடர்ந்து 3 தேர்​தல்​களி​லும் அதி​முகவே வென்று ஆட்​சியை கைப்​பற்​றியது.

அதனால், 1977 தேர்​தலும் திருப்​பு​முனை தந்த புரட்சி தேர்​தலாக பார்க்​கப்​பட்​டது. இதன் அடிப்​படை​யிலேயே விஜய், 2026 தேர்​தலும் தமிழகத்​தில் புரட்​சிக்கு வழிவகுக்​கும் என தெரி​வித்​திருந்​தார். அவர் கணித்​த​படியே, இந்த தேர்​தலில் திமுக, அதி​முகவை தவெக தோற்​கடித்​துள்​ளது.

1967-ம் ஆண்​டுக்கு பிறகு திமுக, அதி​முக ஆகிய இரு திரா​விட கட்​சிகளின் ஆட்​சியே நடை​பெற்று வந்த நிலை​யில், அதற்கு இந்த தேர்​தல் முற்​றுப்​புள்ளி வைத்​துள்​ளது. எப்​போதும் இரு​முறை தொடர்ந்து தோல்​வியை சந்​திக்​காத அதி​முக, இந்த முறை 3-ம் இடத்​துக்கு சென்​றுள்​ளது. எதிர்க்​கட்சி அந்​தஸ்​தை​யும் இழந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

இது​மட்​டுமல்​லாது, இரு கட்​சிகளி​லும் இளைஞர்​களுக்கு வழி​வி​டா​மல் தொடர்ந்து போட்​டி​யிட்டு வந்த மூத்த தலை​வர்​களின் வெற்​றியை, தவெக​வின் விசில் புரட்சி பறித்​திருப்​பது குறிப்​பிடத்​தக்​கது. அதனாலேயே, இது திருப்​பு​முனை தந்த, புரட்​சிக்கு வழி​வகுக்​கும் தேர்​தலாக​வும் அமைந்​துள்​ளது. இதை முன்​பே விஜய்​ கணித்​து கூறி​யிருப்​ப​து குறிப்பிடத்தக்கது.

1967, 77 தேர்தலைப் போல புரட்சிக்கு வழிவகுத்த 2026 தேர்தல்: முன்பே கணித்த தவெக தலைவர் விஜய்
வாக்கு எண்ணும் மையத்தில் திமுக முகவர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in