கல்வெட்டு படிக்கும் பயிற்சியைத் தொடங்க கோரிக்கை

கல்வெட்டு படிக்கும் பயிற்சியைத் தொடங்க கோரிக்கை
Updated on
2 min read

தமிழகத்தில் கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள பண்டைய தமிழ் கல்வெட்டுகள் அவற்றின் முக்கியத்துவம் உணராமல், புனரமைப்பு என்கிற பெயரில் அழிக்கப்படுகின்றன. அதைத் தடுக்க வேண்டும் என்கிறார் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் சென்னை மண்டல முன்னாள் கண்காணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி.

இந்தியாவில் உள்ள மொத்த கல்வெட்டுகளில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுகள்தான். இதில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுகளை மட்டுமே படி எடுத்திருக்கிறது இந்திய தொல்லியல் பரப்பாய்வுத் துறை. அதிலும் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவை இன்னும் முழுமையாகப் பதிப்பிக்கப் படாமல் உள்ளன. ஏற்கெனவே படி எடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பெரும் பகுதி அவை சார்ந்த கோயில்களிலும் பிற பிரதான இடங்களிலும் அப்படியே விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோயில்களில் புனரமைப்புப் பணிகள் மேற் கொள்ளப் படும்போது அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல் வெட்டுகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றின் முக்கியத்துவத்தையும் அதில் உள்ள தகவல்களையும் அறியா ததால் அவற்றைப் பெயர்த்து எடுத்து மூலையில் போட்டுவிடுகின்றனர். இதைத்தடுத்து நிறுத்தி, நமது தமிழ் சொத்தான கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லும் சத்தியமூர்த்தி, ஆர்வ முள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ் கல்வெட்டுகளைப் படிக்க சென்னை தியாகராய நகர் ராம கிருஷ்ணா பள்ளியில் இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

அரசு உத்தரவுக்கு இணையாக..

இதுகுறித்து பேசிய அவர், ‘‘பிரிட்டிஷ் ஆட்சியின்போது கோயில் கல்வெட்டுகளில் இருந்த தகவல் களை அரசு உத்தரவுக்கு இணையாக மதித்தார்கள். ஆனால், சுதந்திரத் துக்குப் பிறகு, கல்வெட்டுகளைப் பாதுகாப்பதில் நாம் போதிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் கல்வெட்டுகளில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழை நம்மால் புரிந்துகொள்ள முடியாததுதான்.

ஊரில் ஒருத்தருக்காவது பண்டையத் தமிழை படிக்கத் தெரிந்திருந்தால் கல்வெட்டுகளின் அருமை நமக்குப் புரியும்; அவை அழியாமல் பாதுகாக்கப்படும். இதற்காகத்தான் நாங்கள் 4 ஆண்டு களுக்கு முன்பு கல்வெட்டு படிக்கும் பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தோம். வேலைவாய்ப்புக் கிடைக்குமா என்று நினைப்பவர்களை இந்த வகுப்பில் நாங்கள் சேர்ப்பதில்லை. எந்தத் துறையிலாவது பணியாற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு மட்டுமே பயிற்சி கொடுக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் வகுப்பு. 2 நாட்கள் மட்டும் நேரடிக் களப்பயிற்சி இருக் கும். இதுவரை சுமார் 300 பேர் வரை பயிற்சி முடித்து வெளியில் சென்றுள்ளனர்’’ என்றார்.

தொடர்ந்தும் பேசும்போது, “தனிப்பட்ட நபரால் இவ்வளவுதான் செய்ய முடியும். எனவே, தமிழ் கல்வெட்டுகளைப் பாதுகாக்க வசதியாக தமிழக அரசு கல்வெட்டுப் படிக்கும் பயிற்சி வகுப்புகளைப் பரவலாகத் தொடங்க வேண்டும். இதற்காக காஞ்சி பல்கலைக்கழகத் துக்கு நாங்கள் ஒரு பாடத்திட்டம் கொடுத்தோம். ஆனால், அவர்கள் அடிப்படைக் கல்வித் தகுதி, வயது வரம்பு என சில நிபந்தனைகளை விதித்தனர்.

அப்படியெல்லாம் நிபந்தனை விதிக்காமல் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம். அதற்கு பல் கலைக்கழக விதிகள் இடமளிக்காததால் அந்த முயற்சி பாதியிலேயே நின்றுவிட்டது. எங்களிடம் பயிற்சி எடுத்தவர்கள், இப்போது, கல் வெட்டுகளைப் படித்து அதிலுள்ள தகவல்களைத் திரட்டி அனுப்பும் அளவுக்கு தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டுவிட்டனர்’’ என்றார் சத்தியமூர்த்தி.

டி.சத்தியமூர்த்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in