தங்கம் பவுன் விலை ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது

தங்கம் பவுன் விலை ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது
Updated on
1 min read

சர்வதேச அளவில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சென்னை யில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.

தங்கம் விலை, முதலீடு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றில் சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களால் உள்ளூரில் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 920-க்கு விற்கப்பட்டது.

22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 865-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 841-க்கு விற்கப்பட்டது. கடந்த மே மாதம் 8-ம் தேதி பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.22 ஆயிரத்து 900-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in