அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார்

அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகார்
Updated on
1 min read

அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் பன்னீர் செல்வம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுமான எஸ்.பி.சண்முகநாதன், அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையில் இன்று (வெள்ளிக்கிழமை) புகார் அளித்துள்ளார்.

சசிகலாவின் அறிவுறுத்தலின் பேரில் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் காவலில் இருந்து அவர் தப்பித்து வந்ததாகவும் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல்துறை ஆணையாளர் எச்.ஜார்ஜ் அவரைக் காண மறுத்துவிட்டதாகவும், அதனால் புகாரை ஆளுநரிடமும், டிஜிபியிடமும் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய சண்முகநாதன், ''புகார் அளிப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை), சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றேன். ஆணையரைப் பார்த்துப் புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அலுவலகத்தில் இருந்துகொண்டே அவர் என்னைப் பார்க்க மறுத்தார். கூடுதல் ஆணையர் கே.ஷங்கரைக் காணுமாறு என்னிடம் கூறப்பட்டது.

சென்னை காவல்துறை ஆணையர் ஓர் எம்எல்ஏவுக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்பதில் தோற்றுவிட்டார்'' என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in