2025-ல் அரசு பணிகளுக்கு 20 ஆயிரம் பேர் தேர்வு

2025-ல் அரசு பணிகளுக்கு 20 ஆயிரம் பேர் தேர்வு

Published on

சென்னை: தமிழகத்​தில் 2025-ம் ஆண்டு அரசு பணி​களுக்கு 20,471 பேர் தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக டிஎன்பிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோ​பாலசுந்​தர​ராஜ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: இந்த 2025-ம் ஆண்டு அரசு பணி​யாளர் தேர்வாணை​யத்​தின் மூலம் தெரிவுபணி​கள் விரைவுபடுத்தப்​பட்டுபல்​வேறு பணி​களுக்கு 20,471 பேர் தேர்​வு செய்​யப்​பட்​டுள்ளனர். 2024-ம் ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது 2025-ல் கூடு​தலாக9,770 பேர் தேர்​வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

நேரடி நியமனங்​களில் சமூகநீ​தியை வலுப்​படுத்​தும் வகையில் 1,007 பின்​னடைவு காலிப்​பணி​யிடங்​கள் (எஸ்​சி-எஸ்டி) நிரப்​பப்​பட்​டுள்​ளன. மேலும் 761 பின்​னடைவு காலிப்​ பணி​யிடங்களை நிரப்ப அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்டு தெரிவு பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. தேர்வு நடை​முறை​களில் நேரலை மூலம் வெளிப்​படைத்​தன்​மை உறு​திபடுத்​தப்பட்டுள்ளது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

2025-ல் அரசு பணிகளுக்கு 20 ஆயிரம் பேர் தேர்வு
“தவெக தலைமையில் விரைவில் மெகா கூட்டணி” - அருண்ராஜ் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in