அமைச்சர் தங்கம் தென்னரசு | கோப்புப் படம்.
அமைச்சர் தங்கம் தென்னரசு | கோப்புப் படம்.

“எகிப்து பிரமிடில் 2,000 ஆண்டு பழமையான தமிழ் - பிராமி கல்வெட்டுகள்!” - தங்கம் தென்னரசு பெருமிதம்

Published on

சென்னை: “எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் - பிராமி கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது” என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது.

எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.

ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி.

“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதோடு “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு | கோப்புப் படம்.
‘ஆட்சியில் பங்கு கிடையாது’ - கறார் காட்டும் ஸ்டாலின்... கலக்கத்தில் காங்கிரஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in