ஈரோடு கிழக்கில் போட்டியிட வேட்புமனு வாங்கிய 200 பேர்

ஈரோடு கிழக்கில் போட்டியிட வேட்புமனு வாங்கிய 200 பேர்
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிட தென்​னிந்​திய செங்​குந்த மகாஜன சங்​கத்​தைச் சேர்ந்த 200-க்​கும் மேற்​பட்​டோர் வேட்​புமனுக்​களை வாங்​கிச் சென்​றனர்.

ஈரோடு கிழக்கு தொகு​தி​யில் தங்​கள் சமூகத்​தைச் சேர்ந்​தவருக்கு திமுக, அதி​முக​வில் வாய்ப்​பளிக்​க​வில்லை எனவும், இதனால் தென்​னிந்​திய மகா ஜன சங்​கம் சார்​பில் 500 பேர் போட்​டி​யிடு​வர் எனவும் அச்​சங்​கம் ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தது.

அதன்​படி நேற்று அச்​சங்​கத்​தின் மாநில துணைத்​தலை​வர் நந்​தகோ​பால் தலை​மை​யில் 200-க்​கும் மேற்​பட்​டோர் ஈரோடு மாநக​ராட்சி அலு​வல​கத்​துக்கு வந்து வேட்​புமனுக்​களை பெற்​றுச்​சென்​றனர்.

அப்​போது அவர்​கள் கூறிய​தாவது: ஈரோடு மாவட்​டத்​தில் போட்​டி​யிட நாங்​கள் வாய்ப்​புக் கோரி​யும், அனைத்​துக் கட்​சிகளும் எங்​களை புறக்​கணித்து வரு​கின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து 200-க்​கும் மேற்​பட்​டோர் வேட்​புமனு வாங்​கி​யுள்​ளோம். மேலும் சிலர் வாங்​க​வுள்​ளனர்.

இவ்வாறு 500-க்​கும் மேற்​பட்​டோர் போட்​டி​யிடு​வார்​கள்.அதே​நேரம் ஈரோடு மேற்கு தொகு​தி​யில் தவெக வேட்​பாளர், எங்​கள் சமு​தா​யம் என்​பதால் ஆதரவு தெரிவித்​துள்​ளோம் என்றனர்.

முன்​ன​தாக வேட்​புமனு பெறவந்​தவர்​களுக்கு அனு​மதி மறுத்​ததால், இரு தரப்​புக்​கும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

ஈரோடு கிழக்கில் போட்டியிட வேட்புமனு வாங்கிய 200 பேர்
அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க பணம் கொடுத்தவர் மீது வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in