கச்சத்தீவில் கொடியேற்ற சென்ற 20 பேர் கைது

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

ராமேசுவரம்: கச்​சத்​தீவு பகுதி மீதான பாரம்​பரிய உரிமையை நிலை​நாட்ட வலி​யுறுத்​தி, குடியரசு தினத்தன்று கச்​சத்​தீவுக்​குச் சென்று இந்​திய தேசி​யக் கொடியை ஏற்​று​வோம் என்று காவிப் புலிப்​படை கட்சி அறிவித்திருந்தது.

இதன்​படி, கட்​சித் தலை​வர் புல​வஞ்சி போஸ் தலை​மை​யில் ஏராள​மானோர் தஞ்​சாவூரிலிருந்து ராமேசுவரத்​துக்கு நேற்று வந்​தனர்.

அவர்​கள் நேற்று மதி​யம் ராம​நாத சுவாமி கோயி​லி்ல் இருந்து ஊர்​வல​மாகப் புறப்​பட்டு அக்னி தீர்த்த கடற்​கரைக்​குச் சென்​ற​போது, அங்கு பாது​காப்​புக்கு நின்​றிருந்த போலீ​ஸார் அவர்​களைத் தடுத்து நிறுத்​தினர்.

பின்​னர், காவிப் புலிப்​படை கட்​சி​யைச் சேர்ந்த 20 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும், படகு மூலம் கச்​சத்​தீவு சென்​று​வி​டா​மல் தடுக்க, விசைப்​படகு துறை​முகத்​தில் காவல் துறை​யினர் பலத்த பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
காரிலிருந்து இறங்கியபோது தவறி விழுந்த காங். முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in