தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆயுதப்படை டிஜிபியாக உள்ள எஸ்.டேவிட்சன் தேவாசிர்வாதம், லஞ்சஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஆயுதப்படை டிஜிபி பணியை கூடுதலாக கவனிப்பார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எச்.எம்.ஜெயராமன், குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை கூடுதல் டிஜிபியாகவும் ஆவடி, தலைமையிடம் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த கே.பவானீஸ்வரி, சென்னை தலைமையிடத்து ஐஜியாகவும் சென்னை ரயில்வே ஐஜி ஏ.ஜி.பாபு, சென்னை நவீனமயமாக்கல் ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, ஆயுதப்படை டிஐஜிஎம்.விஜயலட்சுமி, திருச்சி ஆயுதப்படை டிஐஜியாகவும், கோவைசரக டிஐஜி வி.சசிமோகன், திண்டுக்கல் சரக டிஐஜியாகவும் அந்த பதவியில் இருந்த பி.சாமிநாதன், கோவை சரக டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகர காவல் ஆணையர் என்.மணிவண்ணன், ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும் அப்பதவியில் இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், நெல்லை காவல் ஆணையராகவும் சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஆர்.ஜெயந்தி, தாம்பரம் காவல் ஆணையரக சட்டம் - ஒழுங்கு இணை ஆணையராகவும் அந்த பதவியில் இருந்த ஏ.ஜெயலட்சுமி தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரி எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி திருச்சி சரக டிஐஜியாகவும் சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்பி-2 ஆதர்ஷ் பச்சேரா திருச்சி ரயில்வே எஸ்பியாகவும் அந்த பதவியில் இருந்த பி.ராஜன் சென்னை ரயில்வே எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி நகர தலைமையிடத்து துணை ஆணையர் சி.சியாமளாதேவி சென்னை மதுவிலக்கு மத்திய நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாகவும் அப்பதவியில் இருந்த இ.டி.சாம்சன் மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மதுரை தலைமையிடத்து துணை ஆணையர் ஆர்.ராஜேஷ்வரி, கோவை தலைமையிடத்து துணை ஆணையராகவும், அந்த பதவியில் இருந்தஎம்.பி.திவ்யா மதுரை தலைமையிடத்து துணை ஆணையராகவும் செங்கல்பட்டு எஸ்பி பி.சிபின், ராணிப்பேட்டை எஸ்பியாகவும் அந்த பதவியில் இருந்த அய்மன்ஜமால், செங்கல்பட்டு எஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: பள்ளியில் குண்டு விழுந்து 85 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in