தூத்துக்குடியில் 2,000 லாரிகள் வேலை நிறுத்தம்: துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம்

வாடகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு
தூத்துக்குடியில் 2,000 லாரிகள் வேலை நிறுத்தம்: துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம்

படங்கள்: என்.ராஜேஷ்

Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாடகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 2,000 கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு கன்டெய்னர்கள் மூலம் பல்வேறு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோன்று பல்வேறு நாடுகளில் இருந்தும் கன்டெய்னர் மூலம் சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. துறைமுகத்துக்கு வரும் கன்டெய்னர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதற்காக பிரத்யேக கன்டெய்னர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் கன்டெய்னர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினமும் 2 ஆயிரம் லாரிகள் வரை துறைமுகத்துக்கு சென்று சரக்குகளை ஏற்றி இறக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி துறைமுக சுங்க முகவர்கள் சங்கத்தினர் கன்டெய்னர் லாரிகளுக்கு புதிய வாடகை ஒப்பந்த அடிப்படையில் எழுத்துப்பூர்வமாக வாடகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை வேண்டும். வெளியூர் சரக்கு ஏற்றி செல்லும் போது வாடகையில் 90 சதவீதம் முன்பணமாக வழங்க வேண்டும். வாடகை பில் கொடுத்த 15 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும். கன்டெய்னர் யார்டுக்கு லாரிகள் வந்தவுடன் உடனடியாக சரக்கை இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வ.உ.சி துறைமுகத்துக்குள் நுழைந்த 2 மணி நேரத்துக்குள் கண்டெய்னர் பெட்டியை 8, 9-வது கப்பல் தளத்தில் இறக்கி, ஏற்றிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p><em>படங்கள்: என்.ராஜேஷ்</em></p></div>

படங்கள்: என்.ராஜேஷ்

அதன்படி இன்று (ஆக.6) காலை முதல் கன்டெய்னர் லாரிகள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான கண்டெய்னர் லாரிகள் அந்தந்த குடோன்களிலும், சில லாரிகள் துறைமுக சாலையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. துறைமுகத்துக்கு நேற்று கண்டெய்னர் கப்பல் வராததால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர் போராட்டத்தின் போது, சரக்கு பெட்டக கப்பல் வந்தால் பல கோடி ரூபாய் வர்த்தக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடியில் 2,000 லாரிகள் வேலை நிறுத்தம்: துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம்
செங்கல்பட்டு: மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறப்பாசிரியர்களை கட்டாயப்படுத்துவதாக எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in