சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.

விமானத்தில் பெண்ணுக்கு மயக்கம்: வர்ம சிகிச்சை அளித்த 2 சித்த மருத்துவர்கள்

Published on

சென்னை: டெல்​லி​யில் இருந்து திருச்​சிக்கு சென்ற விமானத்​தில் மயக்​கமடைந்த பெண்​ணுக்கு 2 இளம் சித்த மருத்துவர்கள் வர்ம சிகிச்சை அளித்து குணப்​படுத்​தினர்.

டெல்​லி​யில் இருந்து திருச்​சிக்கு கடந்த 22-ம் தேதி சென்று கொண்​டிருந்த இண்​டிகோ விமானத்​தில் இளம்​பெண் ஒரு​வர் பயணித்​துள்​ளார். விமானத்​தில் கழிப்​பறைக்​குச் செல்ல முயன்​ற​போது, அவர் திடீரென மயங்கி விழுந்​தார்.

விமான பணிப்​பெண்​கள் அவரை இயல்பு நிலைக்கு மீட்​டெடுக்க முயன்​றனர். அது பலனளிக்​காத​தால் விமானத்​தில் மருத்​து​வர்​கள் யாராவது உள்​ளனரா என்று அவர்​கள் உதவி கேட்​டனர்.

அப்​போது விமானத்​தில் இருந்த, எம்​.டி. சித்தா படிப்பை நிறைவு செய்த க.இளவரசன் மற்​றும் இளநிலை சித்த மருத்​துவ அறி​வியல் பட்​டம் பெற்ற ச.க​வுதம் ஆகிய சித்த மருத்துவர்கள், உடனடி​யாக ‘கவுளி அடங்​கல்’ மற்​றும் ‘செவிக்​குற்றி புள்​ளி’ ஆகிய வர்ம சிகிச்​சைகளை, அந்த பெண்​ணுக்கு அளித்​துள்​ளனர்.

இதையடுத்​து, அந்த பெண் மயக்​கம் தெளிந்து இயல்பு நிலைக்​குத் திரும்​பி​னார். மருத்​து​வர்​களின் இந்த சிகிச்​சைக்கு விமானத்​தில் இருந்​தவர்​களும், விமான சேவை நிறு​வனத்​தினரும் நன்​றி​யும், பாராட்​டும் தெரி​வித்​தனர்.

அலோபதி மருத்​து​வத்தை போல், சித்த வர்ம சிகிச்​சைகளும் அசா​தாரண சூழல்​களில் உயிர் காக்​கக்​கூடிய ஒன்றாக இருப்​ப​தாக சித்த மருத்துவர்கள் தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.</p></div>
பழநி கோயிலுக்கு 59 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிர்வாக நிதியில் ரூ.58.54 கோடி செலவிட தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in