குரூப்-2, 2ஏ தேர்வில் 3.87 லட்சம் பேர் பங்கேற்பு: முடிவுகள் 2 மாதத்தில் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தகவல்
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற குரூப்-2, 2ஏ தேர்​வில் 3.97 லட்​சம் பேர் கலந்​து​ கொண்​டனர். வினாத்​தாள் சற்று கடினமாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தகவல் தெரி​வித்​தனர். 2 மாதத்​தில் முடிவு​கள் வெளி​யிடப்​படும் என்று டிஎன்​பிஎஸ்சி தலை​வர் பிர​பாகர் தெரி​வித்​தார்.

சார் பதிவாளர், உதவி ஆய்​வாளர் உட்​பட பல்​வேறு பத​வி​களில் காலியாக உள்ள 846 பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான டிஎன்​பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்​நிலைத் தேர்வு மாநிலம் முழு​வதும் 1,647 மையங்​களில் நேற்று நடை​பெற்​றது. தேர்வு எழுத மொத்​தம் 4.90 லட்​சம் பேர் பதிவு செய்​தனர். அதில் 3.97 லட்​சம் பேர் (81.1%) கலந்​து​கொண்​டனர். 92,595 பேர் பங்​கேற்​வில்லை. சென்​னை​யில் 173 மைங்​களில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுதினர்.

அரசுத் தேர்​வு​களில் ஆள்​மாறாட்​டத்தை தடுக்க விடைத்​தாள்​களில் தேர்​வர்​களிடம் கைரேகை பெறும் நடைமுறை அமலில் உள்​ளது. நேற்று நடந்த குரூப்-2, 2ஏ தேர்​வின்​போது சென்​னை​யில் உள்ள ஒரு மையத்​தில் கண்​காணிப்பு அதி​காரி​கள் கைரேகைக்கு பதில் தேர்​வர்​களிடம் கையெழுத்து பெற்​றதாக புகார்​கள் எழுந்​தன. இத​னால் அந்த மையத்​தில் தேர்வு எழுதி​ய​வர்​கள் தங்​களது விடைத்​தாள்​கள் திருத்​தப்​படுமா என்ற அச்​சத்​தில் உள்​ளனர். இது​குறித்து விசா​ரணை நடத்தி, நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என தேர்​வர்​கள் வலியுறுத்​தினர்.

வினாத்​தாள் கடினம்: வினாத்​தாள் சற்று கடினமாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். இது​குறித்து கேட்​டபோது, “தமிழ் வினாக்​கள் மிகவும் கடினமாக இருந்​தது. கணிதத்​தில் கேட்​கப்​பட்ட கேள்​வி​கள் நன்கு சிந்​தித்து பதிலளிக்​கும்​படி இருந்​தன. பொது அறி​வுப் பகுதி​யிலும் சில கேள்​வி​கள் மிகவும் ஆழமாக யோசித்து விடை அளிக்​கும் வகை​யில் இருந்​ததால் தேர்​வுக்கு கூடுதல் நேரம் தேவைப்​பட்​டது. சில தேர்​வறைகளில் வினாத்​தாள் சற்று தாமத​மாக வழங்​கப்​பட்​டுள்​ளன. வினாத்​தாளை சரியாக 9.15 மணிக்கு கொடுக்க டிஎன்​பிஎஸ்சி நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றனர்.

முன்​னதாக, சென்னை சேத்​துப்​பட்​டில் உள்ள மையத்​தில் தேர்​வின்​போது டிஎன்​பிஎஸ்சி தலை​வர் பிர​பாகர் ஆய்வு மேற்​கொண்​டார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், “குரூப்-2, 2ஏ முதல்​நிலைத் தேர்வு விடைத்​தாள்​கள் திருத்​தப்​பட்டு 2 மாதத்​தில் முடிவு​கள் வெளி​யிடப்​படும்” என்​றார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு

X